twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என் ஆசிரியர்..அவருக்கு உரிமை இருக்கிறது..நடிகர் நட்டியிடம் மன்னிப்புக்கேட்ட பிரபல இந்தி இயக்குனர்!

    By
    |

    சென்னை: பிரபல நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி என்கிற நட்ராஜ் சுப்ரமணியத்திடம் மன்னிப்புக் கேட்டுள்ளார், இயக்குனர் அனுராஜ் காஷ்யப்.

    இந்தி சினிமாவில் முன்னணி ஒளிப்பதிவாளராக இருந்தவர் நட்ராஜ் சுப்ரமணியம். பல மெகா பட்ஜெட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    அனுராக் காஷ்யப் இயக்கிய பாஞ்ச், பிளாக் பிரைடே, பிரதீப் சர்கார் இயக்கிய பரினீதா, ராஜ்குமார் சந்தோஷியின் ஹல்லோ போல், ரோகித் ஷெட்டியின் கோல்மால் ரிட்டர்ன்ஸ் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    இயக்குனர் அனுராக் காஷ்யப் ஒரு முட்டாள்.. அவர் சுயநலவாதி.. சரமாரியாக விளாசிய 'நண்பர்' நட்டி!இயக்குனர் அனுராக் காஷ்யப் ஒரு முட்டாள்.. அவர் சுயநலவாதி.. சரமாரியாக விளாசிய 'நண்பர்' நட்டி!

    சதுரங்க வேட்டை

    சதுரங்க வேட்டை

    தமிழில் விஜய்யின் யூத், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ரமணா, துப்பாக்கி, புலி ஆகிய படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். தெலுங்கு படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ள அவர், உதயபானு மகேஸ்வரன் இயக்கிய 'நாளை' படம் மூலம் நடிகரானார். பின்னர் ஹெச்.வினோத் இயக்கிய சதுரங்க வேட்டை படம் மூலம் கவனிக்கப்பட்டார்.

    அனுராக் காஷ்யப்

    அனுராக் காஷ்யப்

    இவரும் இந்தி சினிமா இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யமும் நண்பர்கள். ஆரம்பத்தில் ஒன்றாக பல படங்களில் பணியாற்றியவர்கள். இந்நிலையில் திடீரென தனது சமூகவலைத்தள பக்கத்தில் அவரை விளாசி இருந்தார், நட்டி. அதில், பணம் வாங்காமல் அவரது பாஞ்ச் படத்தில் பணியாற்றினேன். அவரது லாஸ்ட் டிரைன் டு மகாகாளி, பிளாக் ஃபிரைடே படங்களுக்கும் சம்பளம் தரவில்லை.

    செல்லமான திட்டு

    செல்லமான திட்டு

    அனைத்தையும் அவருக்காகச் செய்தேன். இப்போது என்னை மறந்துவிட்டு முட்டாள்தனமாகப் பேசிவருகிறார். முட்டாள், அனுராக் காஷ்யப். நான் ஒரு சுயநலவாதியை பற்றிப் பேசுகிறேன்' என்று கூறியுள்ளார். இந்த ட்வீட் பற்றி நட்டி என்ற நட்ராஜிடம் கேட்டபோது, 'இது சும்மா செல்லமானத் திட்டு. அனுராக் காஷ்யப் என் இனிய நண்பன்' என்று கூறியிருந்தார்.

    மன்னிப்பு கேட்டார்

    மன்னிப்பு கேட்டார்

    இந்நிலையில், நடிகரும் இயக்குனருமான அனுராக் காஷ்யப், நட்டியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அவரும் நட்டியை போலவே தொடர்ச்சியாக சில ட்வீட்களை போட்டுள்ளார். அதில், நட்டி என் நண்பர் மட்டுமல்ல, எனது ஆசிரியர். நிறைய கற்றுக்கொடுத்தார். கேமராவை இயக்குவது பற்றி சொல்லிக்கொடுத்தார். சினிமாவில் நாங்கள் ஒன்றாகவே வளர்ந்தோம்.

    தமிழ் சினிமா

    தமிழ் சினிமா

    அவர்தான் எனக்கு தமிழ் சினிமாவை அறிமுகப்படுத்தியவர். இயக்குனர் பாலாவை, நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க செய்தவரும் அவர்தான். நான் பார்த்த முதல் தமிழ்படத்தைக் காட்டியதும் அவர்தான். தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கிய படத்தை சப் டைட்டில் இல்லாமல் பார்த்தேன். அதற்குப் பிறகுதான் தமிழ் சினிமாவை கண்டுபிடித்தேன்.

    உரிமை இருக்கிறது

    உரிமை இருக்கிறது

    அவரது காயம் உண்மையானது. என்னிடம் இருந்த எதிர்பார்ப்பின் காரணமாக அவர் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு அந்த உரிமை இருக்கிறது. இது இரண்டு நண்பர்களுக்கு இடையிலானது. அவர் அன்பும் நேர்மையும் கொண்ட இடத்தில் இருந்து வந்தவர். அவர் சொல்வதைக் கவனியுங்கள், நான் என்னுடைய போனை அணைத்து விட்டதால் தொடர்பு கொள்ள முயற்சி செய்திருக்கிறார்.

    கோபம் நேர்மையானது

    கோபம் நேர்மையானது

    அவரை தொந்தரவு செய்யாமல் தனியாக விடுங்கள். இதையே இந்த விவகாரத்தில் என் அறிக்கையாக எடுத்துக் கொள்ளுங்கள். அவருடைய கோபம் நேர்மையானது. அவருக்கு நான் தேவைப்பட்டபோது, நான் அங்கு இல்லை. அது பற்றி எனக்கு தெரியாது. எனவே தெளிவாகச் சொல்கிறேன், மன்னித்துவிடுங்கள் நட்டி. இவ்வாறு அனுராக் காஷ்யப் கூறியுள்ளார்.

    English summary
    Anurag Kashyap, in a series of tweets, apologised to cinematographer Natarajan Subramanian aka Natty for ignoring him all these years.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X