நட்சத்திரம் நகர்கிறது படத்தை பார்த்து பிரம்மித்த இயக்குநர்..பா.ரஞ்சித்தை கட்டியணைத்து பாராட்டினார்!

சென்னை : நட்சத்திரம் நகர்கிறது படத்தை பார்த்த பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் பா ரஞ்சித்தை வெகுவாக பாராட்டி உள்ளார்.

வழக்கமான தனது தொழில்நுட்ப கலைஞர்கள் அணியுடன் இல்லாமல் முழுக்க முழுக்க புது அணியுடன் இணைந்து நட்சத்திரம் நகர்கிறது படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கி உள்ளார்.

இத்திரைப்படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி விநாயகர் சதுரத்தி அன்று உலகமெங்கும் தியேட்டரில் வெளியாக உள்ளது.

நட்சத்திரம் நகர்கிறது

நட்சத்திரம் நகர்கிறது

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து வித்தியாசமான கதைக்களத்தோடு அழகிய காதல் திரைப்படமாக உருவாகி உள்ளது நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம். காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன் மற்றும் சார்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் உட்பட பல நடிகர்கள் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

வித்தியாசமான கதை

வித்தியாசமான கதை

நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு டென்மா இசையமைக்க கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். சில தினங்களுக்கு முன் வெளியான நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. டிரைலரில் காதல் எப்படி வருகிறது. ஒரு பெண்ணையோ ஒரு ஆணையோ பார்த்தவுடன் எப்படி காதல் வருகிறது, பையனும் பையனும், பொண்ணும் பொண்ணும் காதலிக்க கூடாதா? என பா ரஞ்சித் இதுவரை இல்லாத வகையில் வித்தியாசமான கதைக்களத்தை கையில் எடுத்துள்ளார். இதனால், இப்படத்திற்கு தணிக்கைக்குழு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது.

குவியும் பாராட்டு

குவியும் பாராட்டு

இந்நிலையில் மும்பையில் நட்சத்திரம் நகர்கிறது படம் பல திரைத்துறை பிரபலங்களுக்கு திரையிடப்பட்டது. அப்போது பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் படத்தைப் பார்த்த பின்னர் பா ரஞ்சித்தை கட்டியணைத்து பாராட்டி உள்ளார். மேலும் பல பிரபலங்களும் படத்தை வெகுவாகப் பாராட்டி உள்ளனர்.

விக்ரம் -பா ரஞ்சித் கூட்டணி

விக்ரம் -பா ரஞ்சித் கூட்டணி

அடுத்ததாக சீயான் விக்ரமுடன் இணைந்துள்ள இயக்குநர் பா.ரஞ்சித் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தை இயக்குகிறார். கே.ஜி.எஃப்-ஐ கதை களமாக கொண்டு 3Dல் தயாராகும் பிரம்மாண்டமான இத்திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்ட நிலையில் விரைவில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X