நயன்தாராவை ரிஜெக்ட் செய்த நெட்ஃப்ளிக்ஸ்.. பிரபல இயக்குநர் சொன்ன ஷாக் நியூஸ்!

சென்னை: நடிகை நயன்தாரா தனது திரையுலக பயணம் குறித்தும், திருமணம் குறித்தும் Nayanthara beyond the fairy tale என்ற ஆவணப்படத்தை தனது பிறந்த நாளில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியிட்டு இருந்தார். இந்த ஆவணப்படத்தை நெட்ப்ளிக்ஸ் தளம் 25 கோடிக்கு வாங்கி உள்ளது. இது ஒருபுறம் இருக்க நெட்ஃப்ளிக்ஸ்.நயன்தாராவை வேண்டாம் என்று ஒதுக்கி வைத்ததாக இயக்குநர் ஒருவர் அதிர்ச்சியான தகவலை கூறியுள்ளார்.

நானும் ரவுடி தான் படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் அப்படத்தின் 3 வினாடி காட்சிகளை நயன்தாராவின் ஆவணப்படத்தில் பயன்படுத்தியதால், தனுஷ் 10 கோடி நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதற்கு நயன்தாரா கடுமையாக விமர்சனம் செய்தும் கடிதம் வெளியிட்டு இருந்தார். இதைத் தொடர்ந்து வழங்கவும், காட்சிகளை பயன்படுத்த தடை விதிக்கவும் கோரி, வொண்டர் பார் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நயன்தாரா மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் இணைந்து தனுஷுக்கு எதிரான வழக்கை வாதிட்டு வருகிறார்.

Nayanthara Netflix Anurag Kashyap

ரிஜெக்ட் செய்த நெட்ஃப்ளிக்ஸ்: இன்று நயன்தாராவிற்கு ஆதரவாக நீதிமன்றம் வரை துணை நிற்கும் நெட்பிளிக்ஸ் நிறுவனம், ஒரு காலத்தில் நயன்தாரா தெரிந்த முகம் இல்லை என அவரை ரிஜெக்ட் செய்ததாக இயக்குநர் அனுராக் கஷ்யப் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதாவது, நெட்ஃப்ளிக்ஸ் தயாரித்த சேக்ரட் கேம்ஸ் வெப் சீரிஸில் ரா ஏஜென்ட் குசும் தேவி யாதவ் கதாபாத்திரத்தில் நடிக்க,

நயன்தாராவை நடிக்க வைக்க பரித்துரைக்கப்பட்டு இருந்தது. ஆனால், அப்போது நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவில் நிறுவப்படவில்லை. இதனால் அவர்கள் தென் இந்திய ரசிகர்களை பெரிதாக கருதவில்லை. அதனால் நயன்தாராவை அவர்கள் ரிஜெக்ட் செய்தார்கள். சர்வதேச ரசிகர்களுக்கு தெரிந்த முகமாக தேர்வு செய்து நடிக்க வைத்தார்கள் என அனுராக் கஷ்யப் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த செய்தியைப் படித்த இணையவாசிகள், தன்னை வேண்டாம் என்று ரிஜெக்ட் செய்த ஒரு நிறுவனத்திற்காக தனது ஆவணப்படத்தை விற்றார் என்று இணையவாசிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

மூக்குத்தி அம்மன் 2: தற்போது நயன்தாராவின் கைவசம் டெஸ்ட், டாக்சிக், ராக்காயி, மூக்குத்தி அம்மன் 2, மண்ணாங்கட்டி, டியர் ஸ்டூடண்ட்ஸ், கவினுடன் ஒரு படம் என அரை டஜன் படங்களை வைத்து இருக்கிறார். இதில், சுந்தர் சி இயக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை மிக பிரம்மாண்டமாக இன்று நடைபெற்றது. 100 கோடி பட்ஜெட்டில் பான் இந்திய படமாக உருவாக இருக்கும் இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் உடன் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் அவ்னி சிமேக்ஸ், ஐ.வி. ஓய் என்டர்டெய்மென்ட் மற்றும் பி ஃபோர் யூ மோஷன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X