Don't Miss!
- News
கருவில் இருக்கும் குழந்தை தொடர்பான வழக்கு.. தலைமை நீதிபதி சேம்பரில் 40 நிமிடங்கள் நடந்த பரபர விசாரணை
- Sports
சுழற்பந்துவீச்சு மட்டும் ஆபத்து இல்ல.. வேறு ஒரு ஆபத்தும் இருக்கு.. எச்சரிக்கை கொடுத்த ஆஸி வீரர்
- Finance
சுந்தர் பிச்சை சம்பளத்தில் பெரும் சரிவு.. 2023ல் புதிய சம்பள முறை..!
- Automobiles
இத்தனை பேரா... லேண்ட் ரோவர் கார்களுக்கு அடிமையாக பாலிவுட் நடிகைகள்!! யார் யாரிடம் இருக்கு தெரியுமா?
- Lifestyle
நீங்க நுங்கை விரும்பி சாப்பிடுபவரா? அப்ப உங்களுக்கு பல அதிசய நன்மைகள் காத்திருக்காம்...!
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இந்தி படங்களில் கதையே இல்லை..அரச்ச மாவையே அரைக்குறாங்க..மனம் நொந்த பாலிவுட் இயக்குநர்!
மும்பை : பாலிவுட் பிரபல இயக்குநரான அனுராக் காஷ்யப் இந்தி படங்கள் என்னை ஈர்க்கவில்லை என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
பாலிவுட்டின் தனித்துவமான இயக்குநர் அனுராக் காஷ்யப். தற்போது டோபாரா என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் வரும் 19-ம் தேதி வெளியாகிறது.
இந்த படத்தில் டாப்ஸி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2018ம் ஆண்டு வெளியான மன்மர்சியானுக்குப் பிறகு டாப்ஸி காஷியப்புடன் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார்.
எக்ஸ்
மனைவிகளுடன்
அப்படியொரு
போஸ்
கொடுத்த
அனுராக்
காஷ்யப்..
பட
புரமோஷனுக்காக
என
நெட்டிசன்கள்
கலாய்!

அனுராக் காஷ்யப்
நயன்தாரா நடித்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் வில்லனாக மிரட்டியவர் தான் அனுராக் காஷ்யப். இந்த படத்தில் இவரின் வித்தியாசமான குரல் மற்றும் நடிப்பு அனைவருக்கும் பிடித்துப்போனது. 1998ம் ஆண்டு பாலிவுட்டில் பாஞ்ச் மூலம் இயக்குநராக அறிமுகமான அனுராக் காஷ்யப்.

பல ஹிட் படங்கள்
1993 ஆம் ஆண்டு பம்பாய் குண்டுவெடிப்பு வழக்கை அடிப்படையாக வைத்து 2004ம் ஆண்டு பிளாக் ஃப்ரைடே என்ற படத்தை இயக்கினார். ஆனால், எந்த நேரத்தில் மும்பை குண்டுவெடிப்ப வழக்கு நிலுவையில் இருந்ததால் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து 2007ம் ஆண்டு இத்திரைப்படம் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்றது. நோ ஸ்மோக்கிங், ரிட்டர்ன் ஆஃப் ஹனுமான், தேவ்.டி போன்ற படங்களை வரவேற்பை பெற்றன.

டோபாரா
தற்போது அனுராக் காஷ்யப் டோபாரா படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் வரும் 19-ம் தேதி வெளியாகிறது. ஏக்தா கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய காஷ்யப், ஒரு வித்தியாசமான கதை இருப்பதாக டாப்ஸி ஒரு இயக்குநரை அனுப்பினார். அந்த கதையை படித்து புரிந்து கொள்ள எனக்கு இரண்டு மூன்று நாட்கள் தேவைப்பட்டது இது ஒரு வித்தியாசமான கதை என்றார்.

அரைத்த மாவையே அரைத்து
தொடர்ந்து பேசிய காஷியப், பாலிவுட் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் குறைவாக உள்ளது. தென்னிந்தியத் திரைப்படங்களை ஒப்பிடும்போது பாலிவுட் திரைப்படங்கள் சரியாக ஓடுவதில்லை. பாலிவுட்டில் அரைத்த மாவையே அரைப்பது போல், ஏற்கனவே இருக்கும் கதையைத்தான் மீண்டும் மீண்டும் எடுத்து வருகிறார்கள். கதையில் எந்தவிதமான புதுமையும் இல்லாதால் பாலிவுட் படங்கள் ஓடுவதில்லை என்றார்.

இந்தி படம் பிடிக்கவில்லை
தற்போதெல்லாம் தனக்கு இந்தி படங்களை பார்ப்பதற்கே பிடிக்கவில்லை அதற்கு மாற்றாக தமிழ் மற்றும் மலையாள படங்களை அதிகளவில் பார்க்க தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ள அனுராக் கஷ்யப், இங்குள்ள படங்கள் அபாரமாக உள்ளதாக பாரட்டி உள்ளார்.