AR Muruga dos: அடுத்தடுத்த உதவிகள்.. ராசு மதுரவன் குடும்பத்திற்கு ஏஆர் முருகதாஸ் ஒரு லட்சம் நிதிஉதவி
சென்னை: மாயாண்டி குடும்பத்தார், முத்துக்கு முத்தாக போன்ற குடும்ப உறவுகளின் மகத்துவத்தை சொல்லும் படங்களை கொடுத்தவர் இயக்குநர் ராசு மதுரவன். இவரது படங்களை பார்க்கும் யாரும் கண்ணீர் இல்லாமல் கடந்து விட முடியாது. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக ராசு மதுரவன் புற்றுநோயால் உயிரிழந்தார்.
அவர் இறந்து பத்து ஆண்டுகள் ஆனதையொட்டி அவரது மனைவி பிரபல வாரயிதழுக்கு பேட்டி கொடுத்திருந்தார். இந்த பேட்டியை பார்த்துவிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் ராசு மதுரவனின் மகள்களின் இந்த ஆண்டிற்கான படிப்பு செலவை ஏற்றிருந்தார். இது குறித்து ராசு மதுரவனின் மனைவி பவானி நன்றி தெரிவித்திருந்தார்.

இயக்குநர் ராசு மதுரவன்: குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை இயக்கியவர் இயக்குனர் ராசு மதுரவன். அண்ணன் -தம்பிகள் பாசம், குடும்ப உறவுகளை மையமாக வைத்து இவர் இயக்கிய மாயாண்டி குடும்பத்தார், முத்துக்கு முத்தாக படங்கள் ரசிகர்களை வெகு சிறப்பாக கவர்ந்தவை. இந்நிலையில் இயக்குனர் ராசு மதுரவன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக புற்றுநோயால் உயிர் இழந்தார். அவரின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் கடந்த 9ம் தேதி கடைபிடிக்கப்பட்ட நிலையில் தன்னுடைய கணவன் குறித்து பேசிய ராசு மதுரவனின் மனைவி பவானி, தங்களது வாழ்க்கை தினந்தினம் போராட்டத்தில் தான் ஓடிக்கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.
ராசு மதுரவன் மனைவி வருத்தம்: ராசு மதுரவன் இயக்கத்தில் பலர் நடித்திருந்தாலும் யாரும் தங்களை தொடர்பு கொண்டு நலம் விசாரிக்கக்கூட தயாராக இல்லை என்றும் தன்னுடைய மகள்களின் நல்வாழ்க்கைக்காக தான் தினந்தோறும் போராட்டங்களை சந்தித்து வருவதாகவும் அவர் பேட்டி அளித்திருந்தார். அவரது இந்த பேட்டியை பார்த்துவிட்டு நடிகர் சிவகார்த்திகேயன், ராசு மதுரவனின் இரண்டு மகள்களுக்கும் இந்த வருடத்திற்கான கல்வி கட்டணம் சுமார் ஒரு லட்சம் ரூபாயை செலுத்தி உதவி செய்திருந்தார். இதையடுத்து அவருக்கு நன்றி சொன்ன பவானி, தன்னுடைய கணவருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றும் தன்னுடைய கணவர் இயக்கத்தில் நடிக்காத நிலையிலும் தங்களின் கட்டுரையை படித்துவிட்டு உதவி செய்த சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.
கல்வி செலவை ஏற்ற சிவகார்த்திகேயன்: இந்நிலையில் சிவகார்த்திகேயனை தொடர்ந்து தற்போது இயக்குனர் ஏஆர் முருகதாஸ், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் மூலம் மறைந்த இயக்குனர் ராசு மதுரவன் குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி செய்துள்ளார். இந்த தகவலை இயக்குனர்கள் சங்க செயலாளர் பேரரசு தெரிவித்துள்ளார். பவானி குறிப்பிட்டதுபோல, ராசு மதுரவன் இயக்கத்தில் நடித்து பேர் பெற்ற நடிகர்கள் யாரும் அவரது குடும்பத்தினரை கண்டுக் கொள்ளாத நிலையில் தற்போது அவருடன் சற்றும் தொடர்பில் இல்லாத இவர்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளது மிகப்பெரிய அளவில் கவனத்தை பெற்றுள்ளது.
ஏஆர் முருகதாஸ் நிதியுதவி: தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை, பாண்டிசசேரி உள்ளிட்ட இடங்களில் சூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் பிரபல கன்னட நடிகை ருக்மிணி வசந்த் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங்கை விரைவில் நிறைவு செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டு துவக்கத்தில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











