AR Murugados on Vijay :விஜய்யுடன் இணைய இருந்த படம்.. வருத்தத்தை பதிவுசெய்த ஏஆர் முருகதாஸ்!

சென்னை : நடிகர் விஜய்யின் துப்பாக்கி, கத்தி போன்ற படங்களை இயக்கியவர் ஏஆர் முருகதாஸ். சிறப்பான திரைக்கதையுடன் இந்தப் படங்கள் ரசிகர்களை மிரட்டியது.

இந்தப் படங்களை தொடர்ந்து மீண்டும் விஜய் -ஏஆர் முருகதாஸ் கூட்டணி இணையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது வரை இந்தக் கூட்டணி இணையாமல் உள்ளது.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தை தொடர்ந்து லியோ படத்தில் இணைந்து நடித்துவருகிறார் நடிகர் விஜய்.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

நடிகர் விஜய் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் மட்டுமில்லாமல் வளர்ந்துவரும் இளம் இயக்குநர்களுடனும் கூட்டணி வைத்து நடித்து வருகிறார். அந்த வகையில் ஏஆர் முருகதாஸ், நெல்சன், லோகேஷ் கனகராஜ் போன்றவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களின் திறமையை சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். தற்போது மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜுடன் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

சென்னையில் லியோ சூட்டிங்

சென்னையில் லியோ சூட்டிங்

இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீரில் 50 நாட்கள் கடுமையான குளிருக்கிடையில் நடத்தப்பட்டு நிறைவடைந்த நிலையில், தற்போது சென்னையில் அடுத்தக்கட்ட சூட்டிங் துவங்கவுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து மீண்டும் அட்லியுடன் விஜய் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் முன்னதாக விஜய்யின் மாஸை அதிகரித்த கத்தி, துப்பாக்கி போன்ற படங்களை இயக்கிய ஏஆர் முருகதாசுடன் விஜய் மீண்டும் இணையவிருந்த நிலையில், அந்த புராஜெக்ட் நிறுத்தப்பட்டது.

ஏஆர் முருகதாஸ் வருத்தம்

ஏஆர் முருகதாஸ் வருத்தம்

இதுகுறித்து தன்னுடைய சமீபத்திய பேட்டியில் மனம் திறந்துள்ளார் ஏஆர் முருகதாஸ். ரஜினியின் தர்பார் படத்தை தொடர்ந்து விஜய்யுடன் இணையவிருந்ததாகவும், அந்தப் படத்திற்காக ஒரு வருடம் கடினமாக உழைத்ததாகவும் ஆனால் அந்தப் படம் தனக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் வருத்தத்தை பதிவு செய்துள்ளார். இந்தப் படம் கைக்கூடியிருந்தால் ரசிகர்களுக்கு துப்பாக்கி 2 படம் கிடைத்திருக்கும். சமீபத்திய பேட்டியில் விரைவில் துப்பாக்கி 2 படம் குறித்து அறிவிக்கப்படும் என்று முருகதாஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயனுடன் இணையும் ஏஆர் முருகதாஸ்

சிவகார்த்திகேயனுடன் இணையும் ஏஆர் முருகதாஸ்

தற்போது கௌதம் கார்த்திக் நடிப்பில் 1947 என்ற படத்தை தயாரித்து முடித்துள்ளார் ஏஆர் முருகதாஸ். இந்தப் படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துக் கொண்ட நிலையில், அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து முருகதாஸ் படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது கமலின் படத்தில் இணைந்துள்ள சிவகார்த்திகேயன், அடுத்தப்படத்தில் ஏஆர் முருகதாசுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏஆர் முருகதாஸ் தயாரிப்பு

ஏஆர் முருகதாஸ் தயாரிப்பு

இந்தத் தகவல் குறித்து தனது சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார் ஏஆர் முருகதாஸ். சிவகார்த்திகேயனுடன் தான் இணையவுள்ளது குறித்து உறுதிப்படுத்தியுள்ள அவர், இதுகுறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே ஆகஸ்ட் 16 1947 படம் வரும் 7ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதன் ட்ரெயிலர், போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களிடையே மிகச்சிறந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X