Sivakarthikeyan: அமரன் படத்தின் சூட்டிங்.. சிவகார்த்திகேயனுக்கு நோ சொன்ன ஏஆர் முருகதாஸ்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து மாவீரன். அயலான் என வெற்றிப் படங்கள் ரிலீசான சூழலில் தற்போது அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் அமரன் படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 படத்திலும் அவர் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் நிறைவடைந்த சூழலில் தற்போது இரண்டாவது கட்ட சூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது.

நேற்றைய தினம் பிரபல மருத்துவமனையில் இந்த படத்தின் சூட்டிங் நடந்த நிலையில் சிவகார்த்திகேயனை பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதையடுத்து அவர் ரசிகர்களுக்கு கையசைத்து தனது உற்சாகத்தை பகிர்ந்தார். இந்நிலையில் அமரன் படத்தின் சூட்டிங் இன்னும் 20 நாட்கள் மீதமுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் சிவகார்த்திகேயனுக்காக தற்போது ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்ட அமரன் டீம் காத்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Director AR Murugados not allowed Sivakarthikeyan for Amaran movie shooting it seems

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன், அயலான் படங்களை தொடர்ந்து அவர் அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து அவர் தற்போது ஏஆர் முருகதாசுடன் எஸ்கே 23 படத்தில் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இந்தப் படத்திற்காக பிரபல மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஷூட்டிங்கில் சிவகார்த்திகேயன் நேற்றைய தினம் கலந்து கொண்டார். இதன் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸ் அதிகாரியாக நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

பரபரப்பான சூட்டிங்கில் எஸ்கே 23 படம்: முன்னதாக கடந்து சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தில் ஷூட்டிங் புகைப்படத்தை இயக்குனர் ஏஆர் முருகதாஸ் வெளியிட்டு இருந்தார். அதில் அவர் மானிட்டரை செக் செய்வதாகவும் அதன் முன்பு சிவகார்த்திகேயன் நடித்து வருவதாகவும் காணப்பட்டது. இதில் சிவகார்த்திகேயன் அடர்த்தியான தாடியுடன் காணப்பட்டார். இதையடுத்து படத்தில் அவரது லுக்கை ஏஆர் முருகதாஸ் மறைமுகமாக வெளியிட்டாரா என்று ரசிகர்கள் விமர்சித்து வந்தனர். இந்நிலையில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகியுள்ள அமரன் படத்தின் ஷூட்டிங் இன்னும் 20 நாட்கள் மீதம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அமரன் படத்திற்கு நோ சொன்ன இயக்குநர்: தற்போது நடித்துவரும் எஸ்கே 23 படத்தின் ஷூட்டிங்கில் இருந்து இடைவெளி எடுத்துக்கொண்டு அமரன் படத்தில் நடித்து முடித்துவிட்டு வர சிவகார்த்திகேயன் திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு ஏஆர் முருகதாஸ் ஒப்புதல் அளிக்கவில்லை என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது விறுவிறுப்பாக நடந்துவரும் எஸ்கே 23 படத்தின் சூட்டிங் ஒரு ஃபிளோவில் சரியாக நடந்துவரும் சூழலில் இடையில் அமரன் படத்திற்காக சிவகார்த்திகேயன் சென்றால் அவரது லுக் உள்ளிட்டவை மாற வாய்ப்புள்ளதால் ஏஆர் முருகதாஸ் எஸ்கே 23 படத்தை முடித்துவிட்டு அதன் பிறகு அமரன் படத்தில் ஷூட்டிங்கில் பங்கேற்க கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரசிகர்கள் அதிருப்தி: நீண்ட நாட்களாக அமரன் படத்தின் சூட்டிங் காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் நடந்துவந்த சூழலில் தற்போது மீண்டும் அந்த படத்திற்காக 20 நாட்கள் கால்ஷீட் தேவைப்படுவது மற்றும் அதையடுத்து படத்தின் ரிலீஸ் தள்ளி போவது போன்றவை சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங்கை எப்போது நிறைவு செய்து, ரிலீஸ் தேதியை எப்போது அறிவிப்பார்கள் என்று சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதனிடையே ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் எஸ்கே 23 படம் தீபாவளியையொட்டி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X