Vijay: விஜய்க்கு சவால் விட்ட ஏ.ஆர். முருகதாஸ்.. என்னங்க இவரு சொல்றதெல்லாம் நடக்குது..

சென்னை: இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநராக இருக்கின்றார். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் தர்பார். இப்படம் வணிக ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை. இப்போது இவரது இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. அதேநேரத்தில் ஹிந்தியில் சல்மான் கானை வைத்தும் படம் இயக்கி வருகின்றார். இரண்டு படங்களின் வேலையும் ஒருசேர நடைபெற்று வருகின்றது. இதுமட்டும் இல்லாமல் கஜினி படத்தின் இரண்டாம் பாகத்தினை இயக்கவும் அவர் திட்டமிட்டு வருகின்றார். இந்நிலையில் இணையத்தில் ஒரு வீடியோ வேகமாக பரவி வருகின்றது. அதில் ஏ.ஆர். முருகதாஸ் விஜய்க்கு சவால் விடுகின்றார். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

நடிகர் விஜய் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் மொத்தம் மூன்று படங்கள் வந்துள்ளது. துப்பாக்கி, கத்தி மற்றும் சர்கார் என மொத்தம் மூன்று படங்கள் வெளியாகி மூன்று படங்களும் வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் அடித்தது. குறிப்பாக துப்பாக்கி இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் இந்தியாவிற்குள் இருக்கக் கூடிய ஸ்லீப்பர் செல்களை மைய்யப்படுத்திய படம். இதையடுத்து வெளியான கத்தி படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்தார். மேலும் இப்படம் விவசாயத்தின் தேவையை மக்களுக்கு உணர்த்தும் விதமாக அமைக்கப்பட்டது.

ar murugadoss thalapathy vijay vijay

ஏ.ஆர். முருகதாஸ்: மேலும் கத்தி படத்தின் கிளைமேக்ஸில் விஜய் செய்தியாளர்களை நோக்கி பல விஷயங்களைப் பேசுவார். அந்த காட்சிகளுக்காகவே படத்தினை பலமுறை பார்த்த ரசிகர்கள் உள்ளனர். அதன் பின்னர், சர்கார் படத்தில் தமிழ்நாட்டு அரசியலை நேரடியாகச்சாடி எடுக்கப்பட்ட படமாக இப்படம் அமைந்தது. இந்நிலையில் கத்தி படத்திற்குப் பிறகு இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் அளித்த பேட்டியில் விஜய்க்கு சவால் ஒன்றை விடுத்துள்ளார். கத்தி படம் ரிலீஸ் ஆகி 10 ஆண்டுகள் ஆனதை ரசிகர்கள் அண்மையில் கொண்டாடித் தீர்த்தனர்.

ar murugadoss thalapathy vijay vijay

சவால்: அதாவது " விஜய் கத்தி படத்தின் க்ளைமேக்ஸில் ஊடங்கங்களிடம் வேகமாக ஆக்ரோசமாக பேசுவார். அதேபோல் விஜய் நிஜ வாழ்க்கையிலும் பேசவேண்டும்" என சவால் விடுத்துள்ளார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இந்த வீடியோவைப் பார்த்த விஜய் ரசிகர்கள் சிலர், நீங்கள் விட்ட சவாலை தளபதி விஜய் நிறைவேற்றப்போகின்றார் என கமெண்ட் செய்து வருகின்றனர். அதாவது வரும் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெறவுள்ளதால், அங்கு விஜய் ஆக்ரோசமாகவும் கோபமாகவும் பேசவுள்ளார் எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ar murugadoss thalapathy vijay vijay

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X