twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முடக்கிபோட்டுள்ள கொரோனா.. முதல்வரை நேரில் சந்தித்து ரூ. 25 லட்சம் வழங்கிய பிரபல இயக்குநர்!

    |

    சென்னை: கொரோனா கோரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில் பிரபல இயக்குநர் முதல்வர் நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.

    Recommended Video

    முதலமைச்சர் கொரோனா நிதிக்கு 25 லட்சம் வழங்கிய Thala Ajith Kumar

    நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை கொடூரமாக உள்ளது. டெல்லி, உத்தரப்பிரதேசம், பீகார் என வட மாநிலங்கள் பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றன.

    ரூ.6 கோடிக்கு சொகுசு கார் வாங்கிய பிரபாஸ்...டிரெண்டிங் ஆகும் ஃபோட்டோஸ் ரூ.6 கோடிக்கு சொகுசு கார் வாங்கிய பிரபாஸ்...டிரெண்டிங் ஆகும் ஃபோட்டோஸ்

    தமிழகத்திலும் கொரோனா பரவலின் தீவிரம் அதிகமாக உள்ளது. நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்து வருகிறது.

    முழு ஊரடங்கு அமல்

    முழு ஊரடங்கு அமல்

    இதேபோல் தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாள்தோறும் 300 ஐ நெருங்கி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.

    முதல்வர் கோரிக்கை

    முதல்வர் கோரிக்கை

    இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

    ரூ. 1 கோடி நிதியுதவி

    ரூ. 1 கோடி நிதியுதவி


    இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சூர்யா, கார்த்தி ஆகியோர் முதல்வர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதிக்கு ரூபாய் 1 கோடி வழங்கினார்கள்.

    ஏஆர் முருகதாஸ் உதவி

    ஏஆர் முருகதாஸ் உதவி

    இதனை தொடர்ந்து இயக்குநர் சிஎஸ் அமுதன் முதல்வர் நிவாரண நிதிக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கினார். இந்நிலையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிவாரண நிதியாக 25 லட்சம் ரூபாயை முதல்வர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கியுள்ளார்.

    English summary
    The famous director AR Murugadoss has donated 25 lakh rupees to the relief fund. He has given the amount to CM.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X