வாழ்க்கையை திருப்பி போட்ட படத்திற்கு டப்பிங் பேச ஆம்புலன்சில் வந்த அஜித்.. ஓபனாக சொன்ன இயக்குநர்!
சென்னை: நடிகர் அஜித் குமார் தனது திரைவாழ்க்கை பல ஏற்றத் தாழ்வுகளை எதிர்கொண்டுள்ளார். திரைத்துறையில் விடாமுயற்சி என்ற சொல்லுக்கு சாலப் பொருத்தமான நடிகர் என்று சந்தேகமே இல்லாமல் அஜித்தை கூறலாம். அப்படி இருக்கும்போது, அஜித் தனது திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான, இன்னும் சொல்லப்போனால் அவரது திரை வாழ்க்கையை மாற்றிப் போட்ட படத்தின் டப்பிங் பேச ஆம்புலன்சில் வந்துள்ளார் என்று படத்தின் இயக்குநர் ஓபனாகவே சொல்லி உள்ளார்.
அஜித் என்றாலே இன்னொரு பெயர் காதல் மன்னன். இது அவர் நடித்த படத்தின் பெயர் என்றாலும், அது அவருக்கு ஒரு அடைமொழியாகவும் தொற்றிக் கொண்டது. இப்படி இருக்கும்போது, நடிகர் அஜித்தின் திரை வாழ்க்கை முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக மாறியது என்றால் அது தீனா படம் தான். இந்த படம் தமிழ் திரையுலகின் போக்கையே மாற்றியது. படத்தின் கதாநாயகன் ரௌடி என்ற கதாபாத்திரத்தில் உருவாக்கப்பட்ட படமான தீனா அஜித் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படம்.

தீனா: இந்த படத்தில் இருந்துதான் அஜித்தை ரசிகர்கள் தொடங்கி திரைத்துறையினர் வரை பலரும் தல என்று அழைக்க ஆரம்பித்தனர். அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டப் பெயர் தனக்கு வேண்டாம் என்று அஜித் முடிவெடுத்த பின்னர் தல என்றே ரசிகர்கள் அவரை அழைக்க ஆரம்பித்தனர். இப்படி இருக்கும்போது, தீனா படத்திற்கு பின்னர் தான் அஜித்தின் அமர்க்களம், அட்டகாசம், வாலி, என தொடர்ந்து வில்லனிசமான கதாபாத்திரங்களில் நடித்து வெற்றியும் கண்டார் அஜித்.
ஆம்புலன்ஸ்: இந்த படம் அஜித்தின் திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படம். படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கினார். கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தின் டப்பிங் பேச மருத்துவமனையில் இருந்து நேராக டப்பிங் ஸ்டூடியோவுக்கு ஆம்புலன்சில் வந்துள்ளார் அஜித். இது தொடர்பாக அண்மையில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது, " தீனா படத்தின் படப்பிடிப்புகளின் போது அஜித் சார் மிகவும் அதிகப்படியான முதுகு வலியால் அவதிப் பட்டுக் கொண்டு இருந்தார். பாடல் காட்சிகள், சண்டைக் காட்சிகளின் போது எல்லாம் மிகவுமே சிரமப்பட்டார். படத்தை சரியான நேரத்தில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று, மருத்துவமனையில் இருந்து, ஆம்புலன்சில் டப்பிங் ஸ்டூடியோவுக்கு வந்து, படத்தின் டப்பிங் பணிகளை முடித்துக் கொடுத்தார் என்று தெரிவித்துள்ளார்.

விபத்துகள்: அஜித் பைக் ரேஸில் ஈடுபட்ட போது ஏற்பட்ட விபத்தினால் அவருக்கு முதுகில் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விபத்து காதல் மன்னன் படத்தின் போதே ஏற்பட்டது என்று ஏற்கனவே இயக்குநர் சரண் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனக்கு இவ்வளவு ஆபரேஷன்கள் செய்யப்பட்டிருந்தாலும், படத்தின் சண்டைக் காட்சிகளில் தானே நடித்து வருகிறார் அஜித். அதிலும் குறிப்பாக, தனக்கு டூப் போடவே கூடாது என்றும் தெரிவித்து அதை மிகவும் உறுதியாக பின்பற்றி வருகிறார்.


Click it and Unblock the Notifications











