AR Murugadoss: 5 வருஷத்துக்கு முன்னாடியே சல்மான்கிட்ட கதையை சொல்லிட்டேன்.. ஏஆர் முருகதாஸ் வெளிப்படை!
சென்னை: இயக்குநர் ஏஆர் முருகதாஸ் -சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகிவரும் எஸ்கே 23 படத்தின் சூட்டிங் கடந்த மாதத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அனிருத் இசையமைத்துவரும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன்ஜோடியாக ருக்மணி வசந்த் இணைந்துள்ளார். மோகன்லால், வித்யுத் ஜம்வால் உள்ளிட்டவர்களும் இந்தப் படத்தில் லீட் கேரக்டர்களில் இணைந்துள்ளனர். ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகிவரும் இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். காமெடி கதைக்களங்களில் தன்னுடைய படங்களை தேர்வு செய்துவந்த சிவகார்த்திகேயனை ஆக்ஷன் ஹீரோவாக இந்தப் படம் வெளிப்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக ஆக்ஷன் படங்களில் நடித்திருந்தாலும் அவற்றில் காமெடியும் இணைந்திருக்கும்படியாகவே சிவகார்த்திகேயன் நடித்துவந்தார். இந்நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராகிவரும் அமரன் படமும் அவருக்கு சீரியஸ் கேரக்டராகவே அமைந்துள்ளது. படத்தில் ராணுவ வீரராக அவர் நடித்துள்ளார். இதனிடையே கடந்த 2020ம் ஆண்டில் ரஜினிகாந்த், நயன்தாரா லீட் கேரக்டர்களில் நடித்திருந்த தர்பார் படத்தை இயக்கியிருந்தார் ஏஆர் முருகதாஸ். இதனிடையே கடந்த 3 ஆண்டுகளாக அவர் அடுத்தப்படத்தில் கமிட்டாகாமல் இருந்தார். இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் எஸ்கே 23 படத்தை இயக்கி வருகிறார்.

இயக்குநர் ஏஆர் முருகதாஸ்: இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2020ம் ஆண்டில் வெளியானது தர்பார் படம். ரஜினிகாந்த், நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதையடுத்து தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக படங்களை இயக்காமல் இருந்த ஏஆர் முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயன் லீட் கேரக்டரில் நடித்துவரும் எஸ்கே 23 படத்தை இயக்கிவருகிறார். ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த மாதத்தில் துவங்கிய நிலையில், சூட்டிங் சென்னை உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
எஸ்கே23 படம்: படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ருக்மணி வசந்த் இணைந்துள்ளார். முன்னதாக இந்த கேரக்டரில் மிருணாளினி நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இயல்பான தோற்றத்தில் தன்னுடைய நாயகி இருகக வேண்டும் என்றும் அதற்கேற்பவே தான் ஸ்கிரிப்ட்டில் அவரை உருவாக்கியுள்ளதாகவும் அதற்கு ருக்மணி சிறப்பான தேர்வாக இருப்பார் என்பதால் அவரை சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக்கியுள்ளதாகவும் ஏஆர் முருகதாஸ் தெரிவித்திருந்தார். இந்தப் படத்தில் மோகன்லால், வித்யுத் ஜம்வால் ஆகியோரும் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
சல்மானை இயக்கும் ஏஆர் முருகதாஸ்: இந்தப் படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் நடிகர் சல்மான்கானை இயக்கவுள்ளார் ஏஆர் முருகதாஸ். இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சஜித் நடியாவாலா தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கான ஸ்டோரிலைனை தான் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னதாகவே சல்மான்கானிடம் கூறியதாகவும் இதையடுத்து சமீபத்தில் தன்னை அழைத்து பேசிய சல்மான்கான் சில மாற்றங்களை கூறியதாகவும் இதையடுத்தே படத்தின் அறிவிப்பு வெளியானதாகவும் தற்போது ஏஆர் முருகதாஸ் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
சல்மான் படம் குறித்து பகிர்ந்த ஏஆர் முருகதாஸ்: கடந்த 2001ம் ஆண்டிலிருந்து டைரக்டராக 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார் ஏஆர் முருகதாஸ். கோலிவுட்டில் மட்டுமில்லாமல் டோலிவுட், பாலிவுட்டிலும் படங்களை இயக்கியுள்ளார். அமீர்கான் நடிப்பில் கஜினி படத்தின் ரீமேக், அக்ஷய் குமாருடன் துப்பாக்கி படத்தின் ரீமேக் என அடுத்தடுத்த படங்களை பாலிவுட்டில் இயக்கி மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் சாத்தியப்படுத்தினார். இந்நிலையில் மீண்டும் அவர் பாலிவுட்டில் படமியக்கவுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது. சல்மான்கானை வைத்து ஏஆர் முருகதாஸ் இயக்கவுள்ள இந்தப்படம் அவரை ரசிகர்களுக்கு வித்தியாசமாக காட்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் படம் அடுத்த ஆண்டு ஈத் பண்டிகையையொட்டி வெளியாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











