SK 23 படத்தின் கதை இதுதானா? ஏ.ஆர். முருகதாஸ் சொன்ன சுவாரசிய தகவல்!

சென்னை: தமிழ் திரையுலகில், பல ப்ளாக்பஸ்டர் படங்களைத் தந்து, பிரம்மாண்ட கமர்ஷியல் படங்களுக்கு புதிய இலக்கணம் தந்த இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'எஸ்கே23' படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கிய நிலையில் படத்தின் கதை குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படத்தின் பூஜை நேற்று முன்தினம் கோலாகலமாக நடைபெற்றது. இதில், படக்குழுவினர் மற்றும் திரையுலக விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

Director AR Murugadoss talks about Sivakarthikeyans sk23 story

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2020ம் ஆண்டு வெளியானது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்துக்குப் பிறகு 3 வருடங்களாக படங்களை இயக்காமல் இருந்த முருகதாஸ் தற்போது தனது புதிய படத்தை தொடங்க உள்ளார்.

சிவகார்த்திகேயனின் 23வது படம்: எஸ்கே23 என அழைக்கப்படும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கிறார். சப்த சாகரதாச்சே எல்லோ கன்னட படத்தில் நடித்த ருக்மணி வசந்த் இப்படத்தில் ஹீரோயினாக கமிட்டாகி உள்ளார். மேலும், படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை பிப்ரவரி 14ந் தேதி தொடங்கப்பட்ட நிலையில், படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சிவகார்த்திகேயனின் பிறந்த நாளான நாளை வெளியாக உள்ளது. இப்படத்தில், மோகன்லால், வித்யூத் ஜம்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

படத்தின் கதை இதுதான்: SK23 படம் குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஏ.ஆர். முருகதாஸ், இத்திரைப்படம் கஜினி படத்தின் கதை போன்றே சுவாரசியமான திரைக்கதையுடன் சென்னையில் நடக்கும் வேகமான ஆக்ஷன் படமாக இருக்கும். கதையில் எவ்வளவு ஆக்ஷன் இருக்கிறதோ, அதே அளவிற்கு ரசிகர்களை கவரும் வகையில் காதல் மற்றும் தனித்துவமான சில விஷயங்களும் இருக்கும்.

முதற்கட்ட படப்பிடிப்பு: படத்தின் கதை சற்று வித்தியாசமாக இருந்ததால், படத்திற்காக, வித்தியாசமான உடல் மொழி தேவைப்பட்டதால், சிவகார்த்திகேயன் இதற்காக சில பயிற்சிகளை செய்துள்ளார். அதே போல, இயல்பான கதாநாயகி தேவைப்பட்டதால், அந்த கதாபாத்திரத்திற்கு ருக்மணி நான் சரியாக இருப்பார் என்று அவரை தேர்வு செய்ததாக, ஏ.ஆர்.முருகதாஸ் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கிப் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் முழு விவரங்கள் ஒவ்வொன்றாக, அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X