Jigiri Dosthu: ஷங்கர் உதவி இயக்குநருடன் கைகோர்க்கும் அம்மு அபிராமி - பிக்பாஸ் பிரபலம்!

சென்னை: பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற ஷாரிக் ஹாசன் அடுத்ததாக அம்மு அபிராமியுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார்.

ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த அறன் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது. ஜிகிரி தோஸ்த் என்று படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.

Director Arans Jigiri Dosthu movie to be release on December it seems

முன்னதாக பல விருதுகளை தன்னுடைய குறும்படங்களுக்காக அறன் வென்றுள்ள நிலையில் இந்தப் படத்தை அவரே தயாரித்தும் உள்ளார்.

இயக்குநர் ஷங்கர்: இந்திய அளவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் தன்னுடைய பிரம்மாண்டமான படங்கள்மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் ஷங்கர். முன்னணி நடிகர்கள் நடிப்பில் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தவர். தற்போதும் அதிகமான படங்களை இயக்கிவரும் ஷங்கர், கமல் நடிப்பில் இந்தியன் 2 மற்றும் ராம்சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் படங்களை இயக்கி வருகிறார். ஷங்கர் மட்டுமில்லாமல் அவரது உதவி இயக்குநர்களும் இந்திய அளவில் வரவேற்பு பெற்று வருகின்றனர்.

ஷங்கரின் உதவி இயக்குநர் அறன்: இயக்குநர் அட்லீ மிகப்பெரிய உயரங்களை தொட்டுள்ளார். அந்த வகையில் ஷங்கரின் உதவி இயக்குநர் அறன், பல குறும்படங்களையும் இயக்கி ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார். அவர் தற்போது பிரதீப்புடன் இணைந்து ஜிகிரி தோஸ்த் என்ற படத்தை இயக்கி தயாரித்துள்ளார். படத்தில் முக்கியமான கேரக்டரிலும் நடித்துள்ளார். இந்தப் படத்தின் கதைக்களம் நட்பை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

ஜிகிரி தோஸ்த் படம்: அவுட்டிங் செல்லும் மூன்று நண்பர்கள் வழியில் கொடூரமான கேங்ஸ்டர்களால் பெண் ஒருவர் கடத்தப்படுவதை பார்க்கின்றனர். இதையடுத்து அவர்கள் அந்தப் பெண்ணை காப்பாற்றுவதாக இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. இந்தப் படத்தில் டெரரிஸ்ட் டிராக்கர் என்ற தொழில்நுட்பத்தை அவர்கள் பயன்படுத்துவதை கதைக்களத்தில் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார் அறன். இந்தப் படத்தில் பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன், விஜே ஆஷிக், பவித்ரா லட்சுமி, அனுபமா குமார், ஜாங்கிரி மதுமிதா ஆகியோரும் முன்னணி கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

டிசம்பர் மாத ரிலீஸ்: படத்திற்கு அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் டிசம்பர் மாதம் படம் ரிலீசாகவுள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் படம் வெற்றிப்படமாக அமையும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Director Arans Jigiri Dosthu movie to be release on December it seems

நட்பை சொல்லும் கதைக்களம்: தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் நண்பர்களையும் நட்பையும் மையமாக வைத்து வெளியாகும் படங்கள் எப்போதுமே வெற்றியடைந்து விடுகின்றன. நட்பிற்கு மக்கள் கொடுக்கும் முக்கியத்துவமும் இதற்கு காரணமாக அமையலாம். இயக்குநர் ஷங்கரும் நட்பை பிரதானப்படுத்தி நண்பன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். அந்த வகையில் அவரது உதவி இயக்குநரிடமிருந்து ஜிகிரி தோஸ்த் என்ற பெயரில் வெளியாகவுள்ள இந்தப் படமும் கவனத்தை பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X