நடிக்க வந்து காதலியாக மாறிய ஹீராவை மணக்கிறார் 'ஈரம்' அறிவழகன்!

By Shankar

ஈரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் அறிவழகன், தன் காதலியை கைப்பிடிக்கிறார்.

இவர்களின் திருமணம் வரும் செப்டம்பர் மாதம் நடக்கிறது.

அறிவழகன்

அறிவழகன்

எம்ஜிஆர் பிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவரான அறிவழகன், இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக பணியாற்றியவர். பின்னர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக ஈரம் படத்தை இயக்கினார். அந்தப் படம் நல்ல வெற்றியைப் பெற்றதோடு, திறமையுள்ள படைப்பாளியாக அறிவழகனை அடையாளம் காட்டியது.

ரஜினி ரசிகர்

ரஜினி ரசிகர்

தீவிர ரஜினி ரசிகரான அறிவழகன், தன் படத்தின் பாடல்களை ரஜினிதான் வெளியிட வேண்டும் என்றும், படம் வெளியாகும் முன் ரஜினி பார்த்து கருத்து சொல்ல வேண்டும் என்றும் பிடிவாதமாக நின்று ஜெயித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரத்தில் நடிக்க வந்த ஹீரா...

ஈரத்தில் நடிக்க வந்த ஹீரா...

ஈரம் படத்தில் நடிக்க வந்த இளம் நடிகையான ஹீராவை, அந்தப் படம் முடிவதற்குள்ளாகவே காதலிக்க ஆரம்பித்தார் அறிவழகன். ஆனால் இது வெளியில் தெரியாமல் இருந்தது.

வல்லினம்

வல்லினம்

இப்போது வல்லினம் படத்தை உருவாக்கி வருகிறார். இந்தப் படம் முடியும் தறுவாயில் உள்ளது. இந்தப் படம் முடிந்ததும் திருமண அறிவிப்பை வெளியிடுவதாக அறிவழகன் கூறியிருந்தார். அதன்படி இப்போது காதலி ஹீராவை திருமணம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

செப்டம்பரில்...

செப்டம்பரில்...

இந்தத் திருமணம் இருவீட்டு பெரியவர்களின் சம்மதம் மற்றும் ஆசியுடன் வரும் செப்டம்பர் மாதம் நடக்கிறது. திருப்பதியில் பிரமாண்டமாக இந்தத் திருமணத்தை நடத்த பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X