twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நம்ம வீட்டையே யாரோ பிக்பாஸ் வீடாக்கிட்டாங்க.. ஈரம் படம் இயக்குநரின் அட்டகாசமான கொரோனா கவிதை!

    |

    சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் உலகையே அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது.

    இந்தியாவிலும், அதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை படு வேகமாக உயர்ந்து வருகிறது.

    Director Arivazhagan’s mindblowing Corona poem!

    கொரோனா வைரஸ் பாதிப்புகளை சித்தரித்து, திரைக் கலைஞர்கள் பாடலாகவும், கவிதைகளாகவும் எழுதி வருகின்றனர்.

    சமீபத்தில் வைரமுத்துவும் கொரோனாவுக்காக ஒரு பாடலை எழுதி, அதனை எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இசையமைத்து பாடியிருந்தார்.

    இந்நிலையில், ஈரம், வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 மற்றும் அருண் விஜய்யின் 31 வது படத்தை இயக்கி வரும் இயக்குநர் அறிவழகன் அட்டகாசமான ஒரு கொரோனா கவிதை எழுதி வெளியிட்டுள்ளார்.

    வேலண்டைன் டேவில் தொடங்கி கோயில்கள், ஸ்விகி, ஜொமேட்டோ, சாதி, மதம், பிக்பாஸ் என ஒன்றையும் விடாது செம இன்ட்ரஸ்ட்டிங்காக அந்த கவிதை எழுதியுள்ளார்.

    இதோ அந்த கவிதை,

    வேலண்டைன் டே'வுக்கு

    பக்கம் பக்கமா

    எழுதி இருக்கோம்..

    கோரண்டின் டேஸ்'க்குக்கு

    பொழுது போக

    என்ன செய்யலாம்?

    இதுக்கும் ஏதோ எழுதலாம்...

    இதோ

    எழுதுகிறேன்...

    இதுவும் கூட

    பொழுது போக்கா?

    ம்..

    கொஞ்சமாய்

    ஒரு பொதுநலமும் கூட...

    அப்துல் கலாமின்

    வல்லரசு இந்தியா

    ஆண்டில்...

    கண்ணுக்கு தெரியாத

    ஒரு வைரஸ்,

    ஊடுருவிப்

    பார்த்தால்தான் தெரியும்...

    ம்ம்...

    உலகையும்

    ஊடுருவிப் பார்க்கும் நேரமிது

    கிரிக்கெட்

    ஸ்கோர் போர்ட் போல

    நாடு வாரியாக..

    மாநிலம் வாரியாக

    மாவட்டம் வாரியாக

    புதியதாக சேர்ந்தவர்..

    பாதிக்கப்பட்டவர்..

    பலனின்றி இறந்தவர்...

    என

    அறிக்கை கொடுப்பதே

    அன்றாட செய்தியாக..

    ஓடவும் முடியாது

    ஒளியவும் முடியாது

    ஒரே வீட்டுக்குள்

    உன் வீட்டுக்குள்

    இரு..

    என யாரோ

    நம்ம வீட்டையே

    பிக் பாஸாக்கி

    அதட்டி உட்கார

    வைத்தது போல இருக்க..

    வாட்ஸ் அப்கள்

    நியூஸ் சேனலாய்,

    எது புதியது, எது பழையது

    என தெரியாது

    ஒரு தடவைக்கு நாலு தடவை

    வந்த வண்ணம் இருக்க,

    இந்த ஆண்டு

    அமோகம்

    என சொன்ன

    ஜோதிட ஜாம்பவான்கள்

    நிகழ்காலம் கேலிக்கூத்தாகி

    எதிர்காலம் கேள்விக்குறியாகி,

    மீம்ஸ்களுக்கு தீனியாக,

    அரசியலும் வேணாம்

    ஆரவாரமும் வேணாம்

    என

    கொஞ்சம் ஓய்வாய்

    இறைவன்கள்

    பூட்டிக்கொள்ள

    மனிதனே கடவுளாய்

    மருத்துவ கூடத்தில்

    கண் உறங்காது இருக்க,

    ஜாதிக்கு ஜாதி

    என இருந்த

    தீண்டாமை

    இன்று

    மனிதனுக்கும்

    மனிதனுக்குமான

    ஒரு தீண்டாமை வேள்வி...

    யார் போட்ட ஸ்கெட்ச்?

    என வியக்க வைக்க

    பெட்ரோல் டீசல்கள்

    இல்லாத காற்றில்

    இமயமலை கூட தெரிகிறதாம்..

    எந்த பயலையும் காணோம்

    என தெரு நாய்கள்

    குரைக்கவும் பசியாற்றவும்

    ஆளில்லாமல் இருக்க

    வொர்க் ஹோமாம்...

    வீட்டில் இருந்தே

    வேலை... ம்

    வீட்டு வேலையும்

    சேர்ந்து கொள்ள...

    ஹவுஸ் ஒயிஃபுகள்

    வொர்க் ஹோம்

    குழந்தைகளின்

    ஹோம் ஒர்க்

    இரண்டையும் புதியதாய்

    கவனிக்க வைக்க

    வித விதமாய் சாப்பிட,

    ஸ்விக்கி, ஜொமேட்டோ

    இல்லாமல்

    தவிக்கும்! ஒரு கூட்டம்

    ஒரு வேளை சோற்றுக்கே

    வழியில்லாமல்

    வந்த வழியே பேரணியாய்

    நடக்கும் ஒரு கூட்டம்

    முதல் நாள்

    முதல் ஷோவிற்கு

    லத்தி சார்ஜ் வாங்கிய கால்கள்

    வீட்டு சந்தினை

    தாண்டி வந்தாலே

    லத்தி சார்ஜ்க்கு தறி கெட்டு ஓட,

    எந்த இடமாயினும்

    நேர் வரிசையில் நில்..

    என்று

    ஒன்றாம் வகுப்பு

    பாட வரிகள்

    இன்று உண்மையாக...

    லாக் டவுனில்

    டாஸ்மாக் குடிமகன்களுக்கு

    சானிடைஷரும்

    குவார்ட்டராய் தெரிய,

    துடைப்பதும் பெருக்குவதும்

    அதிசயமாய் செய்கிறவர்களுக்கு

    இன்ஸ்டாகிராம்

    பதிவுகளாய் மாற,

    வழக்கமாய்

    இந்த நாடும்

    இந்த அரசும்

    என்ன செய்கிறது?

    என

    பேஸ்புக் போராளிகள்

    ஏவுகணை தொடுக்க,

    நிஜமான

    போர் களத்தில்

    லத்தியுடனும்

    துடைப்பத்துடனும்

    சாலையில் இருக்க..

    கண் போன போக்கில்

    போன கால்களை

    நிறுத்தி

    வாழ்வதற்கு

    எது தேவை

    எது போதும்

    என்பதனை

    ஒரு கோல மாவின்

    வட்டத்திற்குள்

    நிற்க வைத்து விட்டது...

    சமூக தூரம்ன்றது

    சமூகத்தை விட்டு

    உலகத்தை விட்டு

    நிரந்தரமாய் போகாமல் இருக்க

    என

    நம் குழந்தைகளுக்கு

    கற்றுக் கொடுக்கும்

    பாடமாய் இருக்கட்டும்.

    வரும் முன் காப்போம் (அ)

    வந்த பின் பார்ப்போம்

    எதுன்னு செலக்ட் செய்றது

    நம்ம கையில்

    21 நாட்கள் ஊரடங்கு

    விடுமுறை என்றும்..

    வனவாசம் என்றும்...

    பலர் சிலர்

    நினைத்திருக்க

    22ம் நாள்

    விட்டால் போதுமடா..

    ஆள விடுங்கடா...

    என

    கதவினை உடைத்து

    வேங்கையாய் வராமல்

    முதல் கட்ட போர்

    முடிந்து,

    பதுங்கு குழியிலிருந்து

    ஒவ்வொரு அடியினையும்

    எடுத்து வைப்பது போல்

    விழித்திரு

    விடிவு காலம்

    வரும் வரை.

    இல்லையெனில்..

    கைதட்டி...

    டார்ச் அடித்தாலும்...

    இன்று

    டாலர் தேசத்திற்கு

    மருந்தாய்

    கை கொடுத்தாலும்

    நாளை உணவுக்கு

    கை ஏந்தும்

    நிலை மாறி

    இந்த நாடும்

    நாட்டு மக்களும்

    நாசமாய் போகட்டும்

    என

    காலம் கைவிட்டு விட,

    கண்ணுக்கு தெரியாத

    வைரஸ்..

    இனி

    மனிதர்களாய்

    கண்ணுக்கு தெரிய

    இரண்டாம் கட்ட..

    போருக்கு...?!

    மன்னிக்கவும்

    மூன்றாம்

    உலகப் போருக்கு

    தயாரா?

    என மிக நீண்ட கவிதையில், அத்தனை பாதிப்புகளையும், கொரோனாவால் ஏற்படும் எதிர்கால விளைவுகளையும் பற்றி இயக்குநர் அறிவழகன் எழுதியுள்ள கவிதை ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்த்துகிறது.

    English summary
    Eeram, Kutram 23 movie director Arivazhagan penned a very powerful Corona poem. He also alert this pandemic led to Third World War also.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X