உருவாகிறது சூப்பர் ஹிட்டான 'சூது கவ்வும்' படத்தின் 2 ஆம் பாகம்.. சத்யராஜுக்கு முக்கிய கேரக்டராமே!
சென்னை: சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகத்தில் சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
விஜய் சேதுபதிக்கு திருப்பு முனை படமாக அமைந்த படங்களின் ஒன்று, சூது கவ்வும்.
2013 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில், சி.வி குமார் தயாரித்து இருந்தார்.

காமெடி, கிரைம்
இதில், பாபி சிம்ஹா, அசோக் செல்வன், ராதாரவி, ரமேஷ் திலக், கருணாகரன், சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் நடித்து இருந்தனர். காமெடி, கிரைம் படமான இதை, நலன் குமாரசாமி இயக்கி இருந்தார். சூப்பர் ஹிட்டான இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாக தயாரிப்பாளர் சிவி குமார் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

இரண்டாம் பாகம்
இந்நிலையில், இரண்டாம் பாகத்துக்கான வேலைகள் தொடங்கியுள்ளன. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கருணாகரன், காளி வெங்கட் ஆகியோரும் நடிக்கின்றனர். சூது கவ்வும் 2 படத்தை எம்.எஸ்.அர்ஜுன் இயக்குவதாக கூறப்படுகிறது.

யங் மங் ஜங் இயக்குனர்
இவர் பிரபுதேவா, லட்சுமிமேனன் நடித்துள்ள யங் மங் ஜங் என்ற படத்தை இயக்கியவர். இந்தப் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இதில் சத்யராஜை முக்கிய வேடத்தில் நடிக்க வைத்துவிட்டு, விஜய் சேதுபதியை கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அறிவிப்பு விரைவில்
இந்தப் படம் பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. தமிழில் எந்திரன், பில்லா, சாமி, வேலை இல்லா பட்டதாரி, அரண்மனை, சண்டக்கோழி உள்ளிட்ட சில படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன. இந்நிலையில் சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகிறது.


Click it and Unblock the Notifications











