Arun madheswaran: விஜய் தேவரகொண்டாவுடன் இணையும் அருண் மாதேஸ்வரன்.. விரைவில் அறிவிப்பு!

சென்னை: நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன்.

முன்னதாக இவரது இயக்கத்தில் வெளியான ராக்கி, சாணி காயிதம் படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிவையில் கேப்டன் மில்லர் அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப் போகிறது. தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் டிசம்பர் வெளியீடாக ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டது. தற்போது படத்தின் ரிலீஸ் பொங்கலுக்கு தள்ளிப் போயுள்ளது.

Director Arun Madheswaran is to join with actor Vijay devarakonda after Capter miller it seems

இயக்குநர் அருண் மாதேஸ்வரன்: இயக்குநர் அருண் மாதேஸ்வரன் ராக்கி, சாணிக்காயிதம் போன்ற படங்களை இயக்கி தமிழ் ரசிகர்களை மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் ரசிகர்களை ரீச் செய்துள்ளார். இந்தப் படங்களை தொடர்ந்து தற்போது தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படம் சுதந்திர போராட்ட காலகட்டத்தை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களை மிரட்டியுள்ளது.

பொங்கல் ரிலீஸ்: இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீசாகவுள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து டிசம்பர் வெளியீடாக ரிலீசாகவுள்தாக கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்தப் படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தள்ளிப்போயுள்ளது. படத்தின் சிஜி வேலைகள் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள மேலும் நேரம் தேவைப்படுவதால் இந்த முடிவை படக்குழு எடுத்துள்ளதாக தயாரிப்புத் தரப்பு தெரிவித்துள்ளது. படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்டமான அளவில் தயாரித்துள்ளது.

மிரட்டலான டீசர்: படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை அருண் மாதேஸ்வரன் மூன்று பாகங்களாக இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் நடிகர் சிவராஜ்குமார் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான டீசரில் தனுஷ், சிவராஜ்குமார் ஆகியோரின் மிரட்டலான காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

பொங்கல் ரேஸில் கேப்டன் மில்லர்: படம் தற்போது பொங்கலுக்கு தள்ளிப் போயுள்ள நிலையில், போட்டி பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயனின் அயலான், சுந்தர் சியின் அரண்மனை 4, ஐஸ்வர்யா ரஜினியின் லால் சலாம் ஆகிய படங்கள் பொங்கல் ரேஸில் உள்ள நிலையில், விக்ரமின் தங்கலான் படம் ஜனவரி 26ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தீபாவளி ரேஸிலிருந்து பொங்கல் ரேஸில் இணையவுள்ளது கேப்டன் மில்லர்.

அருண் மாதேஸ்வரன் அடுத்தப்படம்?: இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் யாருடன் இணைவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தான் நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு ஒரு கதையை சொல்லி ஓகே வாங்கியுள்ளதாக தற்போது அருண் மாதேஸ்வரன் பேட்டியொன்றில் கூறியுள்ளார். சாணிக் காயிதம் படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே இது நடந்த நிலையில், தனுஷ் படத்திற்காக இந்த ப்ராஜெக்ட் தள்ளிப் போனதாகவும் அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

விஜய் தேவரகொண்டா விருப்பம்: அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தை விஜய் தேவரகொண்டா பல்வேறு பேட்டிகளில் முன்னதாக வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் தற்போதைய அருண் மாதேஸ்வரனின் பேட்டி கவனத்தை பெறறுள்ளது. கேப்டன் மில்லர் படத்தையும் 3 பாகங்களாக எடுக்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ள நிலையில், தனுஷ் அல்லது விஜய் தேவரகொண்டா யாருடன் அருண் மாதேஸ்வரன் இணைவார் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X