வாண்டடு லிஸ்டில் தனுஷ்.. தெறிக்கும் துப்பாக்கி சத்தம்..கேப்டன் மில்லர் டீசர் எப்படி இருக்கு?

சென்னை: தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று நள்ளிரவு வெளியாகி உள்ள கேப்டன் மில்லர் படத்தின் டீசர் எப்படி இருக்கு என்று பார்க்கலாம்.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Director Arun Matheswaran and dhanushs captain miller teaser review

தனுஷின் கேப்டன் மில்லர்: கேப்டன் மில்லர் திரைப்படம் 1940 மற்றும் 1990 காலகட்டத்தை பிரதிபலிக்கும் கதையாக இருக்கும் என்றும். மேலும், இப்படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் மிக நீண்ட எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்தப்படம் உருவாகி வரும் இப்படம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

விறுவிறுப்பான படப்பிடிப்பு: இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, குற்றாலம், தென்காசி ஆகிய இடங்களில் நடத்தப்பட்டது. கலை இயக்குநர் இராமலிங்கம் கைவண்ணத்தில் பீரியட் காலகட்டத்திற்கான அரங்கங்கள் அமைக்கப்பட்டு அதில், படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. கேப்டன் மில்லன் படத்தின் மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

Director Arun Matheswaran and dhanushs captain miller teaser review

மிரட்டலான டீசர்: இந்நிலையில், தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று நள்ளிரவு படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. டீசர் தொடங்கும் போதே வாண்டடு லிஸ்டில் தனுஷ் புகைப்படத்துடன் ஆரம்பாகிறது. 1.33 நிமிட டீசரில் ஆரம்பம் முதல் டீசர் முடியும் வரை வெறும் துப்பாக்கி சத்தம், குண்டு வெடிப்பு என சும்மா மிரட்டலாக உள்ளது டீசர்.

முழுக்க துப்பாக்கி சத்தம்: டீசரில் எந்த ஒரு வசனமும் இல்லாமல், முழுக்க துப்பாக்கி சத்தம் தான், வழக்கம் போல ஜிவி பிரகாஷின் இசை கவனத்தை ஈர்க்கிறது. க்யூட்டான அழகு பதுமையாக படங்களில் வந்து சென்ற பிரியங்கா மோகன் கையில் துப்பாக்கியுடன் புரட்சிப் பெண்ணாக டீசரில் காணப்படுகிறார். மேலும், தனுஷ், சந்தீப் கிஷன், சிவராஜ் குமார் மூவரின் இன்ட்ரோ காட்சிகள் வேறமாதிரி இருக்கிறது. ஜான் கொக்கேனை வித்தியாசமான கெட்டப்பில் இருக்கிறார். மொத்தத்தில் தனுஷின் பிறந்த நாளுக்கு அவரது ரசிகர்களுக்கு சரியான தீனி கிடைத்து இருக்கு என்று தான் சொல்ல வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X