அடுத்தடுத்த ப்ரமோக்கள்... மிரட்டும் சாணிக் காயிதம் படம்... காத்திருக்கும் ரசிகர்கள்!

சென்னை : இயக்குநர் செல்வராகவன் முதல்முறையாக நடிகராக களமிறங்கியுள்ள படம் சாணிக் காயிதம். வரும் 6ம் தேதி அமேசான் பிரைமில் இந்தப் படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரெயிலர், ப்ரமோக்கள் மிரட்டலாக வெளியாகியுள்ளது. வித்தியாசமான கதைகளங்களில் ரசிகர்களை மிரட்டிவரும் அருண் மாதேஸ்வரனின் அடுத்த படைப்பாக இந்தப் படம் வெளியாகவுள்ளது.

இயக்குநர் செல்வராகவன்

இயக்குநர் செல்வராகவன்

செல்வராகவன் கோலிவுட்டின் சிறப்பான இயக்குநர். மயக்கம் என்ன, புதுப்பேட்டை உள்ளிட்ட இவரது படங்கள் எவர்கிரீன் ரகத்தை சேர்ந்தவை. இவரது படங்களுக்கு என்று தனிப்பட்ட வகையில் ரசிகர்கள் காணப்படுகின்றனர். அவரது படங்களுக்காக அவர்கள் காத்திருக்கின்றனர். கொண்டாடவும் செய்கின்றனர்.

நானே வருவேன் படம்

நானே வருவேன் படம்

தற்போது தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கி முடித்துள்ளார் செல்வராகவன். இந்தப் படம் விரைவில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.

அறிமுக படம் சாணிக் காயிதம்

அறிமுக படம் சாணிக் காயிதம்

நடிகராகவும் செல்வராகவும் தற்போது படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இவரது முதல் படமாக சாணிக் காயிதம் இருந்த போதிலும் முதலில் ரிலீசான படம் விஜய்யின் பீஸ்ட். இந்தப் படத்தில் செல்வராகவனின் கேரக்டர் மற்றும் நடிப்பு பேசப்பட்டது. விமர்சகர்களும் அவரது நடிப்புக்கு பாராட்டு தெரிவித்திருந்தனர்.

அமேசான் ப்ரைமில் ரிலீஸ்

அமேசான் ப்ரைமில் ரிலீஸ்

இந்நிலையில் வரும் 6ம் தேதி அமேசான் ப்ரைமில் அவரது சாணிக் காயிதம் படம் நேரடியாக வெளியாக உள்ளது. இந்தப் படத்தை ராக்கி புகழ் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். படத்தில் அவருடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். பழிவாங்கும் கதைக்களத்தை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.

அழுத்தமான திரைக்கதை

அழுத்தமான திரைக்கதை

படம் மிகவும் அழுத்தமான திரைக்கதையும் உருவாகியுள்ள நிலையில், படத்தின் ட்ரெயிலர் வெளியாகி மிரட்டியது. இதையடுத்து படத்தின் அடுத்தடுத்த ப்ரமோக்களை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். இந்தப் ப்ரமோக்களில் ஆக்ரோஷமான கீர்த்தி மற்றும் செல்வராகவனை பார்க்க முடிகிறது.

புதிய ப்ரமோ வெளியீடு

புதிய ப்ரமோ வெளியீடு

தற்போது இந்த புதிய ப்ரமோவை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ப்ரமோவில் கழுத்தை இறுக்கி பிடித்து ரெண்டு அமுக்கு அமுக்கினா அடங்கிப் போவாங்கடா என்று பெரியவர் ஒருவர் கூறுவதாக அமைந்துள்ளது. தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் காட்டப்படுகிறார். அவர் சுடுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X