Captain Miller-மொத்தம் 3 பாகங்கள்..125 நாட்களில் 75 நாட்கள் அதற்கு மட்டுமே போனது..கேப்டன் மில்லர் சீக்ரெட்ஸ்
சென்னை: தற்போது எடுக்கப்பட்டிருப்பது கேப்டன் மில்லர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம்தான் என இயக்குநர் அருண் மாதேஸ்வரன் பேசியிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. படமானது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்கான ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் இயக்குநர்.
தனுஷ் நடிப்பில் கடைசியாக வாத்தி திரைப்படம் வெளியானது. தெலுங்கு மார்க்கெட்டிலும் தனக்கென தனி இடத்தை பிடித்துவிடலாம் என்று கணக்கு போட்டிருந்தார் தனுஷ். ஆனால் படம் அட்டர் ஃப்ளாப் ஆனது. அதற்கு காரணம் அந்தப் படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரிதான். ஏனெனில் அவரது மேக்கிங் வாத்தி படம் தெலுங்கு படமா இல்லை தமிழ் படமா என்ற சந்தேகத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியது. அதனாலேயே படத்துடன் ரசிகர்கள் ஒன்ற முடியாமல் தவித்தனர்.

கேப்டன் மில்லர்: வாத்தி படத்தின் தோல்விக்கு பிறகு அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருக்கிறார் தனுஷ். அருண் ஏற்கனவே ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்கி கவனம் ஈர்த்தார். இளம் தலைமுறை இயக்குநர்களில் அருண் மாதேஸ்வரனின் மேக்கிங்கும் வித்தியாசமாகவும் புதுமையாகவும் இருக்கிறது. எனவே தனுஷுடன் அவர் சேர்ந்திருக்கும் கேப்டன் மில்லர் கண்டிப்பாக வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என்று தனுஷ் ரசிகர்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர்.
பொங்கல் ரிலீஸ்: இப்படத்தில் தனுஷுடன் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். பீரியட் ஜானரில் உருவாகியிருக்கும் படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்பது ட்ரெய்லரை பார்க்கையில் உறுதியாகிறது. இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதற்கு போட்டியாக சிவகார்த்திகேயனின் அயலான் படமும் களமிறங்குவது கவனிக்கத்தக்கது.
ப்ரோமோஷன் பணிகள்: படம் ரிலீஸாவதற்கு இன்னும் நான்கு நாட்களே இருக்கும் சூழலில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அந்தவகையில் அருண் மாதேஸ்வரன் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் பேசிய அவர், "கேப்டன் மில்லர் திரைப்படம் மூன்று பாகங்களை கொண்டது. அந்த பாகங்களில் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகவிருப்பது படத்தின் இரண்டாம் பாகம்தான். இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து முதல் மற்றும் மூன்றாவது பாகங்கள் சீக்வெல்லாக எடுக்கப்படும்.
75 நாட்கள் அதற்கே போய்விட்டது: கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங் மொத்தம் 120 நாட்கள் நடந்தது. அதில் 75 நாட்கள் ஆக்ஷன் காட்சிகளை படமாக்குவதற்கு மட்டுமே செலவானது. இதில் திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியிருக்கிறார். கிட்டத்தட்ட 1000 நபர்களை கொண்ட ஸ்டண்ட் காட்சி ஒன்று படத்தில் இருக்கிறது. அது அவரது மாஸ்டர் பீஸாக அமைந்திருக்கிறது. அந்தக் காட்சி கண்டிப்பாக படத்தின் ஹைலைட்டாக இ ருக்கும். கேப்டன் மில்லர் பீரியாடிக் ஜானரில் உருவாகியிருக்கிறது. அதில் 5 சதவீதம் மட்டும்தான் செயற்கையான லைட்டிங்கை பயன்படுத்தியிருக்கிறேன். மற்ற அனைத்துமே இயற்கையான வெளிச்சத்தையே பயன்படுத்தியிருக்கிறேன்" என்றார்.
மீண்டும் கூட்டணி: முன்னதாக கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங் போய்க்கொண்டிருக்கும்போதே தனுஷும் அருண் மாதேஸ்வரனும் மீண்டும் இணைவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அநேகமாக அந்தப் படம் கேப்டன் மில்லரின் அடுத்த பாகமாக இருக்கலாம் என்ற கருத்து திரைத்துறையினரிடையே எழுந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











