மொத்த போலீஸையும் குறை சொல்லாதீங்க.. இது சினிமா ஸ்க்ரிப்ட் இல்ல.. ஹரியை விளாசிய பிரபல இயக்குநர்!

சென்னை: உணர்ச்சிவசப்பட்டு மொத்த காவல்துறையையும் குறை சொல்லாதீர்கள் என இயக்குநர் ஹரியை பிரபல இயக்குநர் விளாசியிருக்கிறார்.

Recommended Video

Sathankulam Incident : 'அந்த 5 படங்களை எடுத்ததற்கு வேதனைப்படுகிறேன்' - Director Hari வேதனை

சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தனர் தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ். இவர்கள் கூடுதல் நேரம் கடையை திறந்து வைத்திருந்ததற்காக போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

பின்னர் விசாரணை கைதியாக கோவில்பட்டி சிறைக்கு மாற்றப்பட்ட போது அவர்கள் இருவரும் அடுத்தடுத்து இறந்துவிட்டனர். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுக்கவும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வெட்கப்படுகிறேன்

வெட்கப்படுகிறேன்

இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாகவே முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரை சாடி இயக்குநர் ஹரி கடிதம் வெளியிட்டார். போலீசாரை பெருமைப்படுத்தி படம் எடுத்ததற்காக வெட்கப்படுவதாக காட்டமாக கூறியிருந்தார்.

ஏற்க முடியாது

ஏற்க முடியாது

இந்நிலையில் இயக்குநர் ஹரியை மறைமுகமாக சாடியிருக்கிறார் பிரபல இயக்குநரான அருண் வைத்யநாதன். இதுதொடர்பாக அவரது பேஸ்புக் பதிவில் , சாதான்குளம் சம்பவத்திற்கு நான் கண்டனம் தெரிவிக்கிறேன். அதேநேரத்தில் முழு போலீஸ் படையையும் கெட்டவர்கள் மற்றும் கொடுமையானவர்கள் என்ற கருத்தை நான் ஏற்கவில்லை.

மறந்து விடாதீர்கள்

மறந்து விடாதீர்கள்

கோவிட் -19 ஆரம்ப நாட்களில், தமிழகம் முழுவதும் காவல் துறையால் பல நல்ல முயற்சிகள் செய்யப்பட்டன என்பதை மறந்துவிடாதீர்கள். சில கருப்பு ஆடுகளுக்கு முழுத் துறையையும் பொதுமைப்படுத்துவதையும் கறுப்பு பட்டியலில் சேர்ப்பதையும் நிறுத்துங்கள். அந்த கருப்பு ஆடுகள் வாழ்க்கையின் ஒவ்வொரு பயணத்திலும் உள்ளன!

சினிமா ஸ்க்ரிப்ட் அல்ல

சினிமா ஸ்க்ரிப்ட் அல்ல

குறிப்பாக, திரைப்பட சகோதரத்துவ உறுப்பினர்கள் சிலர் 'காவல்துறை வேடங்களை இயக்கியதற்காக வெட்கப்படுகிறேன் என்று சொல்லும் அளவிற்குச் செல்கிறார்கள்.. வாருங்கள், எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்கள்.. லைக்ஸ்களுக்காகவும் ரீட்டிவிட்களுக்காகவும் நீங்கள் அதிக உணர்ச்சிவசப்பட இது ஒரு சினிமா ஸ்கிரிப்ட் அல்ல.

மோசமான வெளிச்சம்

மோசமான வெளிச்சம்

இதை ஒரு தனி சம்பவமாக கருதுவோம், உண்மையை விசாரித்து அவர்களுக்கு பின்னால் உள்ளவர்களை தண்டிப்போம். முழு துறையையும் மோசமான வெளிச்சத்தில் காட்ட வேண்டாம். ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ் குடும்பத்தினருக்காக என்னுடைய பிரார்த்தனைகள். விரைவில் நீதிவழங்கப்படும் என்று நம்புகிறேன்.. இவ்வாறு அருண் வைத்யநாதன் பதிவிட்டுள்ளார்.

வரனே அவஷ்யமுண்டு

வரனே அவஷ்யமுண்டு

அருண் வைத்தியநாதன், அச்சமுண்டு அச்சமுண்டு, கல்யாண சமையல் சாதம், நிபுணன் ஆகிய படங்களை தமிழில் இயக்கியிருக்கிறார். மலையாளத்தில் பெருச்சாழி என்ற படத்தை கொடுத்திருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு துல்கர் சல்மானின் வரனே அவஷ்யமுண்டு படம் சர்ச்சையாக்கப்பட்டதற்கு காரணம் லாக்டவுனால் ஏற்பட்ட சலிப்புதான் என்று பளிச்சென கூறியிருந்தார் இயக்குநர் அருண் வைத்யநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X