Actor Vikram: மேல மேல ஆக்ஷனுக்கும் மேல.. விக்ரமின் வீர தீர சூரன் படம் குறித்து இயக்குநர் பளீச்!
சென்னை: நடிகர் விக்ரமின் தங்கலான் மற்றும் துருவ நட்சத்திரம் படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராக உள்ளன. இதில் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் ரிலீஸ் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் சுதந்திர போராட்ட காலக்கட்டத்தில் கோலார் தங்கவயலில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து விக்ரம், எஸ்ஜே சூர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ள படம் வீர தீர சூரன். இந்தப் படத்தின் அறிமுக கிளிம்ப்ஸ் கடந்த ஆண்டிலேயே வெளியான நிலையில், கடந்த 17ம் தேதி விக்ரம் பிறந்தநாளையொட்டி படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டது. படம் கேங்ஸ்டர் படமாக வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

நடிகர் விக்ரம்: நடிகர் விக்ரம் தான் ஏற்கும் கேரக்டரை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தும் நடிகர்களில் ஒருவர். தன்னுடைய கேரக்டர்களுக்காக அதிகமான மெனக்கெடல்களை செய்து வருபவர். கடந்த ஆண்டில் விக்ரம் நடிப்பில் பொன்னியின் செல்வன் 2 படம் வெளியானது. மணிரத்னம் இயக்கத்தில் மல்ட்டி ஸ்டாரர் படமாக வெளியான இந்தப் படத்தில் வழக்கம்போல தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் விக்ரம். படத்தில் நந்தினியுடனான காதல், காதல் தோல்வியால் ஏற்பட்ட வலி போன்றவற்றை பார்வையாளர்களுக்கு சிறப்பாக கடத்தினார். இந்தப் படம் விக்ரமிற்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.
தங்கலான் படம்: இந்தப் படத்தை தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் கடந்த ஜனவரியிலேயே ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் படம் வெளியாகும் என்று முன்னதாக பா ரஞ்சித் கூறியிருந்தார். அதனால் விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படமும் நீண்ட நாட்களாக ரிலீசுக்காக போராடி வருகிறது. இந்தப்படமும் அடுத்தடுத்த ரிலீஸ் அறிவிப்புகளை செய்து, ரிலீசாகாமல் உள்ளது.
வீர தீர சூரன் படம்: இந்நிலையில் அடுத்ததாக சித்தா பட இயக்குநர் அருண்குமாருடன் இணைந்துள்ளார் விக்ரம். இந்தப் படத்தின் அறிமுக கிளிம்ப்ஸ் கடந்த ஆண்டிலேயே வெளியான நிலையில், கடந்த 17ம் தேதி விக்ரமின் பிறந்தநாளையொட்டி படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு வீர தீர சூரன் என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் விக்ரமுடன் எஸ்ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடிக்க கமிட்டாகியுள்ளனர். படத்தில் கிராமத்து கேரக்டரில் நடிக்கவுள்ளார் விக்ரம். படத்தில் மலையாள நடிகர் சித்திக்கும் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேங்ஸ்டர் கதைக்களம்: இதனிடையே, கேங்ஸ்டர் கதைக்களத்தில் அதிரடி ஆக்ஷன் படமாக வீர தீர சூரன் உருவாகவுள்ளதாக படத்தின் இயக்குநர் அருண்குமார் தன்னுடைய பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். ஆனால் படத்தில் ஆக்ஷனையும் தாண்டி கொண்டாட அதிகமான விஷயங்கள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இன்னும் சில தினங்களில் படத்தின் முதல்கட்ட சூட்டிங்கிற்காக மதுரை செல்லவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். படத்தின் இரண்டாவது பாகத்திற்கான சூட்டிங் தற்போது நடக்கவுள்ளதாகவும் இதுவே முதலில் ரிலீசாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து படத்தின் முதல் பாகத்தின் சூட்டிங் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











