Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
சிவகார்த்திகேயனின் உருக்கமான பேச்சு....மேடையில் கண்ணீர் விட்ட இயக்குநர் அருண்ராஜ் காமராஜ்
சென்னை : சென்னையில் நடைபெற்ற டிரைலர் வெளியீட்டு விழாவில், சிவகார்த்திகேயன் பேசியதைக் கேட்டு, மேடையில் அமர்ந்திருந்த அருண்ராஜ் காமராஜ் கண்கலங்கி அழுத சம்பவம் அனைவரையும் கலங்க வைத்து விட்டது.
தமிழில் அரசில், போலீஸ் படமாக உருவாக்கப்பட்டுள்ள படம் நெஞ்சுக்கு நீதி. டைரக்டர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ள படம். ஆரி அர்ஜுனன், தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.
நெஞ்சுக்கு நீதி டிரைலர் வரவேயில்லையே...மறுபடியும் ஏமாற்றிய போனி கபூர்
எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்
இந்தியில் 2019 ம் ஆண்டு ரிலீசான பிளாக்பஸ்டர் படமான ஆர்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக் தான் நெஞ்சுக்கு நீதி. தமிழக முன்னாள் முதல்வரும், உதயநிதியின் தாத்தாவுமான மு.கருணாநிதி எழுதி நெஞ்சுக்கு நீதி என்ற புத்தகத்தின் டைட்டிலேயே உதயநிதி நடித்திருப்பதால் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
டிரைலர், பாடல் ரிலீஸ்
2021 ம் ஆண்டு டிசம்பர் மாதமே இந்த படத்தின் ஷுட்டிங் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வரும் இந்த படம் 2022 ம்ஆண்டு மே 20 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் இன்று மாலை 6.30 மணிக்கு யூட்யூப் தளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
டிரைலர் வெளியீட்டு விழா
இந்நிலையில் சென்னையில் நெஞ்சுக்கு நீதி படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், அன்புச் செழியன், போனி கபூர், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன், தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி, டைரக்டர் அருண்ராஜா காமராஜ், நடிகர் ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கண்கலங்கிய அருண்ராஜா
விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், படத்தின் டைரக்டர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்து பற்றி பேசினார். அப்போது மேடையிலேயே கண்கலங்கி அழுதார் அருண்ராஜா காமராஜ். அவரின் மனைவி சிந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். ஆனால் தற்போது வரை தனது சோஷியல் மீடியா பக்கங்களில் தனது மனைவியின் பிறந்தநாள், திருமணநாள் என அனைத்திற்கும் மனைவியை நினைத்து உருக்கமாக போஸ்ட் பதிவிட்டு வருகிறார் அருண்ராஜா.