மனைவியை நினைத்து மீளா துயரத்தில் இயக்குநர்.. “உன்னை மிஸ் பண்றேன் பாப்பி“ உருக்கமான பதிவு !
சென்னை : இயக்குநர் அருண்ராஜா காமராஜ், தனது மனைவியின் மறைவை நினைத்து மீளா துயரத்தில் உருக்கமாக பதிவினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்,
நடிகர், பாடகர், பாடலாசிரியர், எழுத்தாளர், இயக்குனர் என பன்முக திறமைகள் கொண்டவர் அருண்ராஜா காமராஜ். தெறி, பென்சில், கபாலி மற்றும் ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களுக்கு பாடலை எழுதியுள்ளார். கபாலி திரைப்படத்திற்காக இவர் எழுதிய நெருப்புடா பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. மேலும், ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் ஒரு நடிகனாக அறிமுகமானார். மான் கராத்தே படத்தில் நெருப்பு குமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கோலமாவு கோகிலா படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த நிலையில், சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடிப்பில் 2018ல் வெளிவந்த கனா படத்தில் இயக்குனராக அறிமுகமானார். தற்போது உதயநிதி ஸ்டாலின் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை இயக்கி உள்ளார்.இத்திரைப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் மே 20-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

கடந்த கொரோனா 2அலை கோர தாண்டவம் ஆடி பல உயிர்களை காவு வாங்கியது. அதில், அருண்ராஜா காமராஜின் மனைவியும் ஒருவர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிந்துஜா, கடந்த ஆண்டு மே 17ந் தேதி சிகிச்சை பலளிக்காமல் உயிரிழந்தார். சிந்தியாவின் மறைவு அருண்ராஜா காமராஜை மீளா துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.
இந்நிலையில், அருண்ராஜா காமராஜ், சோஷியல் மீடியாவில் போஸ்ட் ஒன்றை ஷேர் செய்திருந்தார். அதில் மறைந்த தனது மனைவி சிந்துஜாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி இருக்கிறார். எப்போதும் உன்னை மிஸ் செய்கிறேன், பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாப்பி என்று உருக்கமுடன் கேப்ஷன் கொடுத்து மனைவியின் போட்டோவை ஷேர் செய்து உள்ளார். இந்த பதிவினை பார்க்கும் போது மனம் மிகவும் கனமாகியது.


Click it and Unblock the Notifications











