லேபிள் கொடுத்த கெத்து.. லேடி சூப்பர்ஸ்டாருடன் இணையும் அருண்ராஜா காமராஜ்!
சென்னை: இயக்குநர் அருண்ராஜா காமராஜ் கனா படம் மூலம் தன்னுடைய இயக்குநர் கனவை நிறைவேற்றிக் கொண்டவர். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக மட்டுமின்றி கேமியோ ரோலிலும் நடித்து அசத்தியிருந்தார். விளையாட்டை மையமாக கொண்டு வெளியாகும் படங்கள், ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வெற்றிப்படங்களாக மாறிவரும் நிலையில், இந்தப் படமும் பெண் கிரிக்கெட்டரை மையமாக கொண்டு வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியது.
இந்தப் படத்தை தொடர்ந்து உதயநிதி லீட் கேரக்டரில் நடித்திருந்த நெஞ்சுக்கு நீதி படத்தை இயக்கியிருந்தார் அருண்ராஜா காமராஜ். இந்தப் படமும் இவரது இயக்குநருக்கான அங்கீகாரத்தை உயர்த்திய நிலையில் லேபிள் என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார். இந்த தொடரில் ஜெய், தன்யா ஹோப், மகேந்திரன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். வட சென்னை மக்களின் வாழ்வியலை கதைக்களமாக கொண்டிருந்த இந்த தொடரும் அருண் ராஜா காமராஜிற்கு மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.

இயக்குநர் அருண்ராஜா காமராஜ்: இயக்குநர், நடிகர், பாடலாசிரியர் என பன்முகத்திறமையுடன் கோலிவுட்டில் வலம்வந்துக் கொண்டிருப்பவர் அருண்ராஜா காமராஜ். சிவகார்த்திகேயன் தயாரிப்பு மற்றும் நடிப்பில் வெளியான கனா படத்தின்மூலம் இவர் இயக்குநராக கோலிவுட்டில் அறிமுகமானார். தொடர்ந்து உதயநிதி லீட் கேரக்டரில் நடித்திருந்த நெஞ்சுக்கு நீதி படம் மூலமும் இவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார். முன்னதாக மான் கராத்தே உள்ளிட்ட படங்களில் நடிக்கவும் செய்துள்ள அருண்ராஜா காமராஜ், இயக்கத்தில் சமீபத்தில் லேபிள் என்ற வெப் தொடர் வெளியானது.
ஹாட்ஸ்டாரில் வெளியான தொடர்: இதில் ஜெய், தன்யா ஹோப் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்தத் தொடர் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து, அருண்ராஜா காமராஜிற்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. ஹாட்ஸ்டாரில் வெளியான இந்த தொடர் வட சென்னை மக்களின் வாழ்வியலை கூறுவதாக அமைந்தது. படம் வரவேற்பிற்கு இணையான விமர்சனங்களையும் பெற்றிருந்தது. படத்தின் வசனங்கள் காதால் கேட்க முடியவில்லை என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவரது அடுத்தப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நயன்தாராவுடன் கூட்டணி: அடுத்ததாக நயன்தாராவை லீட் கேரக்டரில் வைத்து பிரின்ஸ் -பிரின்சஸ் என்ற படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் படம் பேச்சளவில் மட்டுமே இருந்தது. நயன்தாராவின் சமீபத்திய படங்கள் எதுவும் வொர்க் அவுட் ஆகாத நிலையில், இந்தப் படத்தை தயாரிப்பது குறித்து தயக்கத்துடன் தயாரிப்புத் தரப்பு இருந்த நிலையில், தற்போது லேபிள் படம் கொடுத்துள்ள தைரியத்தை அடுத்து இந்தப் படம் தற்போது மீண்டும் கையில் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லேபிள் 8 எபிசோட்கள்: கடந்த நவம்பர் 10ம் தேதிமுதல் வாரம் ஒரு எபிசோடாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது லேபிள் வெப் தொடர். கடந்த ஆண்டின் இறுதியில் இதன் கடைசி எபிசோடும் வெளியான நிலையில் இந்தத் தொடர் தனக்கு மறக்க முடியாத அனுபவத்தை தந்துள்ளதாக அருண்ராஜா காமராஜ் முன்னதாக தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஜெய் நடிப்பில் வெளியான அன்னபூரணி படம் கலவையான விமர்சனங்களையே பெற்ற நிலையில், அவரது லேபிள் சீரிஸ் அவருக்கு மீண்டும் சிறப்பான என்ட்ரியை கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











