ஆடி கார் வாங்கிய அருண்ராஜா காமராஜ்.. காருடன் சூப்பர் புகைப்படம் வெளியீடு.. திரையுலகினர் பாராட்டு!

சென்னை : நடிகரும் இயக்குநருமான அருண்ராஜா காமராஜ் தமிழ் திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார்.

சமீபத்தில் உதயநிதியின் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி என்ற படத்தை கொடுத்துள்ளார். இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது.

இவரது கனா படம் சிறப்பான வரவேற்பையும் வசூலையும் பெற்றது. முதல்முறையாக சீனாவிலும் வெளியிடப்பட்டது.

 பன்முக கலைஞர் அருண்ராஜா காமராஜ்

பன்முக கலைஞர் அருண்ராஜா காமராஜ்

இயக்குநர், நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவராக தமிழ் திரையுலகில் வலம் வந்துக் கொண்டிருப்பவர் அருண்ராஜா காமராஜ். திருச்சியில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது அங்கு படித்த சிவகார்த்திகேயனுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பழக்கம் தற்போது வரை தொடர்ந்து வருகிறது.

பாடலாசிரியராக அறிமுகம்

பாடலாசிரியராக அறிமுகம்

கடந்த 2012ல் வெளியான பீட்சா படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார் அருண்ராஜா காமராஜ். தொடர்ந்து அவரது ஜிகிர்தண்டா படத்தில் பாடகராகவும் மாறினார். இந்தப் படத்தின் டிங் டாங் பாடலை எழுதி பாடியுள்ளார். தொடர்ந்து அட்லியின் இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் நடிகராக அறிமுகமானார்.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

தொடர்ந்து காக்கி சட்டை, டிமாண்டி காலனி, த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, தெறி, கபாலி, கொடி, பைரவா, காலா, சர்வம் தாளமயம், அசுரன், மாஸ்டர் என பல முக்கியமான திரைப்படங்களில் பாடலாசிரியராகப் பணியாற்றியுள்ளார் அருண்ராஜா. ரஜினியின் கபாலி படத்தில் நெருப்புடா, விஜய்யின் மாஸ்டர் படத்தில் குட்டி ஸ்டோரி பாடல்கள் இவரது சிறப்பை சர்வதேச அளவில் கொண்டு சென்றன.

நடிகராகவும் கலக்கல்

நடிகராகவும் கலக்கல்

ராஜா ராணி, மான் கராத்தே, ரெமோ, மரகத நாணயம், நட்புன்னா என்னானு தெரியுமா ஆகிய படங்களின் மூலம் ஒரு நல்ல நகைச்சுவை நடிகராகவும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள அருண்ராஜா காமராஜ், ஒரு இயக்குநராகவும் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார்.

இயக்குநராக அறிமுகம்

இயக்குநராக அறிமுகம்

சிவகார்த்திகேயன் நடிப்பு மற்றும் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் லீட் கதாபாத்திரத்தில் நடித்து வெளியான கனா படத்தின்மூலம் தன்னுடைய கனவுகளை சிறப்பாக வெளிப்படுத்தினார். இந்தப் படம் சிறப்பான வசூல்சாதனை புரிந்ததோடு, சிறப்பான விமர்சனங்களையும் பெற்றது.

நெஞ்சுக்கு நீதி படம்

நெஞ்சுக்கு நீதி படம்

இந்தப் படம் சீனாவிலும் திரையிடப்பட்டு சிறப்பான வரவேற்பை பெற்றது. இதையடுத்து இவரது இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி படமும் சிறப்பான விமர்சனங்களை பெற்றது. ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இதில் உதயநிதி போலீஸ் அதிகாரியாக நடித்து வரவேற்பு பெற்றார். தொடர்ந்து இந்தக் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாகவும் உதயநிதி தெரிவித்துள்ளார்.

ஆடி கார் வாங்கிய அருண்ராஜா

ஆடி கார் வாங்கிய அருண்ராஜா

இந்நிலையில் தற்போது அருண்ராஜா காமராஜ் புதிதாக ஆடி கார் வாங்கியுள்ளார். இதன் புகைப்படசம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அரசு பள்ளியில் படித்த மாணவன் ஒருவன் தற்போது தமிழ் திரையுலகில் இந்த அளவிற்கு அசுர வளர்ச்சி பெற்றுள்ளது அனைவரையும் பெருமை கொள்ள செய்துள்ளது. அருண்ராஜா காமராஜிற்கு திரையுலகினர் பாராட்டுக்களை குவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X