இரண்டாவது திருமணம் செய்தாரா இயக்குநர் அருண்ராஜா காமராஜ்?.. இணையத்தில் கசியும் தகவல்!

சென்னை : இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர், பாடகர், பாடலாசிரியர், எழுத்தாளர், இயக்குநர் என பன்முக திறமைகள் கொண்டவர் அருண்ராஜா காமராஜ். தெறி, பென்சில், கபாலி மற்றும் ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களுக்கு பாடலை எழுதியுள்ளார்.

கபாலி திரைப்படத்திற்காக இவர் எழுதிய நெருப்புடா பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. மேலும், ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் ஒரு நடிகனாக அறிமுகமானார். மான் கராத்தே படத்தில் நெருப்பு குமார் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

அருண்ராஜா காமராஜ்

அருண்ராஜா காமராஜ்

கோலமாவு கோகிலா படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்த அருண்ராஜா காமராஜ், சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடிப்பில் 2018ல் வெளிவந்த கனா படத்தில் இயக்குநராக அறிமுகமானார். இதையடுத்து, ஆர்டிகள் 15 படத்தை தமிழில் நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் ரீமேக் செய்திருந்தார். உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

காதல் மனைவி மறைவு

காதல் மனைவி மறைவு

கொரோனா இரண்டாவது அலை கோர தாண்டவம் ஆடி பல உயிர்களை காவு வாங்கியது அதில், அருண்ராஜா காமராஜின் மனைவியும் ஒருவர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிந்துஜா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த ஆண்டு மே 17ந் தேதி உயிரிழந்தார். அருண்ராஜா காமராஜின் வெற்றிக்கு உறுதுணையாக அவரது மனைவி மறைவிற்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.

மீளா துயரத்தில்

மீளா துயரத்தில்

சிந்தியாவின் மறைவால் மீளா துயரத்தில் இருந்த அருண்ராஜா காமராஜ், மனைவி சிந்துஜாவிற்கு பிறந்தநாளில், அவரின் புகைப்படத்தை பகிர்ந்து, எப்போதும் உன்னை மிஸ் செய்கிறேன் பாப்பி என்று உருக்கமுடன் பகிர்ந்து இருந்தார். இது கரையாத கல் நெஞ்சையும் கரைத்து கண்ணீரில் மூழ்கடித்தது.

இரண்டாவது திருமணம்

இரண்டாவது திருமணம்

இந்நிலையில், அருண்ராஜா காமராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 28ந் தேதி இவர் திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அருண்ராஜா காமராஜ் விரைவில் வெளியிடுவார் என்றும் தகவல் கசிந்துள்ளது. அவர் திருமணம் செய்து கொண்ட பெண் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X