மறைந்த மனைவிக்கு திருமணநாள் வாழ்த்து...அருண்ராஜா காமராஜ் உருக்கம்!

சென்னை : இயக்குனரும் நடிகருமான அருண் ராஜா காமராஜ் மறைந்த தனது மனைவிக்கு திருமணநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் அவரது மனைவி உடல் நலக்குறைவால் காலமானார்.

இந்நிலையில் மறைந்த தனது மனைவிக்கு திருமண நாள் வாழ்த்துக்களை அருண்ராஜா பகிர்ந்துள்ளது அனைவரையும் வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது.

இயக்குனர் அருண்ராஜா காமராஜ்

இயக்குனர் அருண்ராஜா காமராஜ்

கோலிவுட்டில் பாடலாசிரியர், பாடகர், நடிகர் மற்றும் இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். கபாலி படத்தில் இவர் எழுதி பாடிய நெருப்புடா நெருங்குடா பார்ப்போம் என்ற பாடல் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. இதேபோல பைரவா படத்திலும் வரலாம் வரலாம் வா என்ற பாடலை பாடியிருந்தார் அருண் ராஜா.

கனா படம்

கனா படம்

பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இவர் இயக்கிய கனா என்ற படத்தை தயாரித்திருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த படம் சிறப்பான வசூலையும் விமர்சனங்களையும் பெற்றிருந்தது. படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்திருந்தார்.

நடிப்பிலும் கவனம்

நடிப்பிலும் கவனம்

முன்னதாக ராஜா ராணி, மான் கராத்தே உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவரது நடிப்பும் டைமிங் காமெடியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

உதயநிதியுடன் படம்

உதயநிதியுடன் படம்

தற்போது இந்தியில் ஹிட்டடித்த ஆர்டிகள் 15 என்ற படத்தை தமிழில் உதயநிதி ஸ்டாலினை வைத்து அவர் ரீமேக் செய்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மனைவி மரணம்

மனைவி மரணம்

தொடர்ந்து தன்னை திரைப்படங்களில் அவர் பிஸியாக வைத்திருந்த நிலையில் அவரது மனைவி சிந்துஜா கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து அவரது மனைவிக்கு சிவகார்த்திகேயன், உதயநிதி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

உடைந்து போன அருண்ராஜா

உடைந்து போன அருண்ராஜா

இந்த சம்பவத்தால் அருண்ராஜா காமராஜ் மிகவும் உடைந்து போனார். தன்னுடைய மனைவியின் நினைவுகளை அவரால் மறக்க முடியவில்லை. அவ்வப்போது அவரது நினைவை சமூகவலைத்தளங்களில் அருண்ராஜா காமராஜ் பகிர்ந்து வருகிறார்.

திருமணநாள் வாழ்த்து

திருமணநாள் வாழ்த்து

இந்நிலையில் தன்னுடைய திருமண நாளை அவர் நினைவு கூர்ந்துள்ளார். மறைந்த தன்னுடைய மனைவி சிந்துஜாவிற்கு அவர் திருமண நாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். பாப்பி என்ற செல்லப் பெயரையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் மற்றும் சக நடிகர்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X