விஜய்னு கிளப்பி விட்டுட்டாய்ங்க... அவர் இல்லையாம்... கார்த்தியை இயக்குகிறார் அருண்ராஜா காமராஜ்

By

சென்னை: பாடலாசிரியரும் இயக்குனருமான அருண்ராஜா காமராஜ், அடுத்து கார்த்தியை இயக்க இருக்கிறார்.

அட்லி இயக்கிய ராஜாராணி படத்தில் நடித்தவர் அருண்ராஜா காமராஜ். அடுத்து மான் கராத்தே, பென்சில், ரெமோ, மரகத நாணயம் உட்பட சில படங்களில் நடித்தார்.

இதற்கிடையே காக்கி சட்டை, தெறி, கபாலியில் நெருப்புடா, கொடி, பைரவா, காலா, அசுரன் உட்பட பல படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார்.

இயக்குனர் ஆனார்

இயக்குனர் ஆனார்

இவர் முதன்முதலாக இயக்கிய படம் கனா. நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த இந்தப் படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன், இளவரசு உட்பட பலர் நடித்திருந்தனர். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருந்தார். திபுநினான் தாமஸ் இசை அமைத்திருந்தார். இந்தப் படம் வரவேற்பை பெற்றது. இந்தப்படம் தெலுங்கில் கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் ரீமேக் ஆனது.

கார்த்தி படம்

கார்த்தி படம்


தற்போது அடுத்த படத்துக்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார் அருண்ராஜா. அவர் விஜய் நடிக்கும் படத்தை இயக்கப் போவதாகச் செய்திகள் வெளியாயின. ஆனால், அவர் கார்த்தி நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். நடிகர் கார்த்தி இப்போது சுல்தான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் மே மாதம் ரிலீஸ் ஆகும் என்று தெரிகிறது.

எஸ்.பி.மித்ரன்

எஸ்.பி.மித்ரன்

இதற்கிடையே மணிரத்னம் இயக்கும் பொன்னியில் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் இப்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இந்தப் படத்தை அடுத்து இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய எஸ்.பி.மித்ரன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் வேலைகள் இப்போது பரபரப்பாக நடந்துவருகின்றனர். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிரார்.

பிரின்ஸ் பிக்சர்ஸ்

பிரின்ஸ் பிக்சர்ஸ்

இந்தப் படத்துக்குப் பிறகே அருண்ராஜா காமராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் கார்த்தி. இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்‌ஷ்மண் தயாரிக்கிறார். இதற்கான கதையை இப்போதுதான் அருண்ராஜா எழுதி வருகிறார். முழுவதும் முடிவடைந்ததும் அதுபற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று படக்க்ழு தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X