'பிக் பாஸ்' இல்லத்திற்கு அட்லியும் சதிஷும் போகனும்.. பிரபல பாடகரின் விபரீத ஆசை!
சென்னை: பிக்பாஸ் வீட்டிற்கு இயக்குநர் அட்லீ மற்றும் நடிகர் சதிஷ் ஆகியோர் செல்ல வேண்டும் என பிரபல பாடகர் மற்றும் இயக்குநரான ஒருவர் கூறியுள்ளார்.
அருண்ராஜா காமராஜ், இவருக்கு நடிகர், பாடகர், பாடலாசிரியர், எழுத்தாளர், இயக்குநர் என பல முகங்கள் உள்ளன. கபாலி படத்தில் 'நெருப்புடா' என்ற பாடலை எழுதிப் பாடினார் அருண்ராஜ் காமராஜ்.

இந்தப் பாடல் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. அருண்ராஜா காமராஜ், நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து கனா என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கடந்த ஆண்டு ரிலீஸானது.

இவர் ராஜா ராணி, மான் கராத்தே, பென்சில், ரெமோ, மரகத நாணயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் அருண்ராஜா காமராஜ் 'பிக் பாஸ்' போட்டியாளர் கவினுடன் 'நட்புனா என்னனு தெரியுமா' என்ற படத்திலும் இணைந்து நடித்துள்ளார்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் உள்ள கவின் குறித்து தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார் அருண்ராஜா காமராஜ். அப்போது படத்தின் போது கவின் நன்றாக பழகியதாக அவர் கூறினார்.
ஆனால் அப்போது கவின் பழகியதற்கும் 'பிக் பாஸ்' வீட்டில் நடந்துகொள்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது என்றும் அவர் கூறினார். மேலும் 'பிக் பாஸ்' வீட்டிற்குள் சதீஷ் மற்றும் இயக்குனர் அட்லி வந்தால் நன்றாக இருக்கும் என்றும் அருடணராஜா காமராஜ் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











