அய்யோ.. என்ன கொடுமை.. இயக்குநர் அருண்ராஜா காமராஜின் இளம் மனைவி கொரோனாவுக்கு பலி!

சென்னை: நடிகரும் இயக்குநருமான அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவுக்கு பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

Arunraja Kamaraj wife passed away | Sindhuja #RIP

2013ஆம் ஆண்டு ராஜா ராணி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அருண்ராஜா காமராஜ்.

தொடர்ந்து மான் கராத்தே, ரெமோ, பென்சில், மரகத நாணயம், நட்புன்னா என்னன்னு தெரியுமா, கபெ ரணசிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

பாடலாசிரியர்

பாடலாசிரியர்

பின்னர் 2017ஆம் ஆண்டு மரகத நாணயம் படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். தெறி, காக்கிச்சட்டை, கபாலி, காலா உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல்களையும் எழுதியுள்ளார் அருண்ராஜா காமராஜ்.

நெருப்புடா நெருங்குடா

நெருப்புடா நெருங்குடா

ஏராளமான பாடல்களையும் பாடியுள்ளார் அருண்ராஜா காமராஜ். கபாலி படத்தில் இடம்பெற்ற நெருப்புடா நெருங்குடா பாடல் பெரும் பிரபலமானது. கடைசியாக அசுரன், 50/50 ஆகிய படங்களில் வா எழுந்துவா, பின்லேடன் ஆகிய பாடல்களை பாடியுள்ளார்.

கனா படத்தின் இயக்குநர்

கனா படத்தின் இயக்குநர்

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 2018ஆம் ஆண்டு கனா படத்தை இயக்கினார் அருண்ராஜா காமராஜ். இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது.

மனைவிக்கு கொரோனா

மனைவிக்கு கொரோனா

தற்போது ஆர்ட்டிக்கிள் 15 என்ற படத்தை நடிகர் உதயநிதி ஸ்டாலினை வைத்து இயக்கி வருகிறார் அருண்ராஜா காமராஜ். இந்நிலையில் இவரது மனைவி சிந்துஜா கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

மனைவி மரணம்

மனைவி மரணம்

இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் சிந்துஜா. இந்நிலையில் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி சிந்துஜா உயிரிழந்தார். அவருக்கு வயது 38. அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X