Chiyaan63 movie: அஸ்வின் ராம் இயக்கத்தில் இணையும் விக்ரம்.. யார் தயாரிப்பு தெரியுமா?

சென்னை: நடிகர் சியான் விக்ரம் அடுத்தடுத்த சிறப்பான கதைக்களங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் மல்ட்டி ஸ்டாரர் படமாக வெளியான பொன்னியின் செல்வன் 2 படம் இவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்தது.

அடுத்த மாதம் துருவ நட்சத்திரம் படம் ரிலீசாகவுள்ளது. படத்தை கௌதம் மேனன் இயக்கி தயாரித்துள்ளார்.

Director Ashwin Raam directs Actor Vikrams Chiyaan 63 movie and produced by Lyca productions

இதையடுத்து அடுத்த ஆண்டு குடியரசு தினக் கொண்டாட்டமாக தங்கலான் படமும் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் டீசர் வரும் நவம்பர் 1ம் தேதி வெளியாகவுள்ளது.

நடிகர் விக்ரம்: நடிகர் விக்ரம் சியான் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். சிறப்பான கதைக்களங்களை தேர்ந்தெடுப்பதுடன் அந்தக் கேரக்டருக்காக அதன் சிறப்பிற்காக மிகவும் மெனக்கெடுபவர் விக்ரம். சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படத்திலும் முன்னதாக வெளியான இதன் முதல் பாகத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்தப் படம் மல்ட்டி ஸ்டாரர் படமாக இருந்தபோதிலும் ரசிகர்களுக்கு மிகச்சிறப்பான அனுபவத்தை கொடுத்தது.

அடுத்தடுத்த படங்கள்: தொடர்ந்து அடுத்தடுத்து துருவ நட்சத்திரம், தங்கலான் படங்கள் ஏறக்குறைய ஒருமாத இடைவெளிகளில் விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ளன. நவம்பர் 24ம் தேதி கௌதம் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் டீசர், ட்ரெயிலர், பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இந்தப் படத்தை முன்னதாக பார்த்த விக்ரம், படத்தின் இரண்டாவது பாகத்திற்கு டேட்ஸ் கொடுப்பதாக உற்சாகமாக தெரிவித்திருந்தார்.

நவம்பர் 1ல் வெளியாகும் தங்கலான் டீசர்: இந்நிலையில் சமீபத்தில் இந்தப் படத்தை தன்னுடைய குடும்பத்தினருடன் கண்டு களித்துள்ளார். அதே உற்சாக மனநிலையை தற்போதும் விக்ரம் வெளிப்படுத்தியுள்ளார். இதையடுதது பா ரஞ்சித் இயக்கத்தில் இருவேறு கெட்டப்புகளில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படம் வரும் ஜனவரி 26ம் தேதி சர்வதேச அளவில் வெளியாகவுள்ளது. இதன் டீசர், வரும் நவம்பர் 1ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட காலகட்டத்தையொட்டி இந்தப் படத்தின் கதை உருவாகியுள்ளது.

சியான் 62 படம்: இதனிடையே சியான் படத்தின் அடுத்தப்படம் குறித்த அறிவிப்பும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது. சமீபத்தில் சித்தார்த் இயக்கத்தில் வெளியான சித்தா படத்தை இயக்கியுள்ள அருண்குமார் இயக்கத்தில் சியான் 62 படத்தில் விக்ரம் இணையவுள்ளார். இதன அறிவிப்பு வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இதில் கிராமத்து கெட்டப்பில் விக்ரம் காணப்படுகிறார். சித்தா படத்தை போலவே இந்தப் படமும் அழுத்தமான கதைக்களத்தில் உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சியான் 63 படம்: இதனிடையே நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி இரட்டை வேடங்களில் நடித்திருந்த அன்பறிவு படத்தின் இயக்குநர் அஸ்வின் ராம் இயக்கத்திலும் விக்ரம் தனது அடுத்தப் படத்தில் இணையவுள்ளார். அன்பறிவு படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் அஸ்வின் ராம் சொன்ன கதை பிடித்து போக படத்திற்கு ஓகே சொல்லியுள்ளார் விக்ரம். இநத்ப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில் படத்தை லைகா தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X