பலாத்கார காட்சியில் நடிகையிடம் சொல்லாமல் உடையை கிழிக்கச் சொன்னார்கள்: நடிகர் பேட்டி

By Siva

மும்பை: நடிகையின் சம்மதம் இல்லாமல் அவரின் உடையை கிழிக்குமாறு இயக்குனர் தன்னிடம் கூறியதாக நடிகர் தலிப் தாஹில் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் மீ டூ இயக்கம் வேகம் எடுத்துள்ள நிலையில் பலரும் தங்களுக்கு நடந்த கொடுமைகள் பற்றி பேசத் துவங்கியுள்ளனர். இந்நிலையில் நடிகர் தலிப் தாஹில் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் பற்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

பலாத்கார காட்சி

பலாத்கார காட்சி

25 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் பலாத்கார காட்சியை படமாக்கினார்கள். அந்த படத்தின் இயக்குனர்(அவரின் பெயரை சொல்ல விரும்பவில்லை) என்னிடம் வந்து, அந்த காட்சியின் போது நடிகையின் உடை கிழித்துவிடுங்கள், அது செய்யுங்கள், இது செய்யுங்கள். ஆனால் இதை எல்லாம் நாம் அந்த நடிகையிடம் தெரிவிக்கப் போவது இல்லை என்றார்.

நடிகை

நடிகை

ஒரு நடிகையின் அனுமதி இல்லாமல் அவரின் உடையை கிழித்து நடிக்க மாட்டேன் என்று நான் திட்டவட்டமாக கூறிவிட்டேன். இது நாகரீகமற்ற செயல் என்று இயக்குனரிடம் தெரிவித்தேன். அந்த நடிகை சினிமா துறைக்கு புதியவர். இங்கு அவர் பிழைக்க வேண்டும். அதனால் நான் இயக்குனர் சொன்னதற்கு உல்டாவாக செய்தேன்.

திட்டம்

திட்டம்

அந்த நடிகையை அழைத்து இயக்குனர் என்ன திட்டமிடுகிறார் என்று உங்களுக்கு தெரியுமா? என்று கேட்டேன். இதை பார்த்த இயக்குனர் அதிர்ச்சி அடைந்து அந்த இடத்தில் இருந்து கிட்டத்தட்ட ஓடிவிட்டார். இயக்குனர் என்னிடம் சொன்னதை நான் அந்த நடிகையிடம் தெரிவித்தேன். அதை கேட்டு அவர் அழுது கொண்டே ஒரு அறைக்குள் ஓடிவிட்டார்.

சினிமா

சினிமா

அந்த காலத்தில் செல்போன்கள் எல்லாம் இல்லை. கேமரா மட்டுமே. அந்த நடிகையை அழைத்து இயக்குனர் சொன்னது போன்று எதுவும் செய்ய மாட்டோம். உங்களுக்கு சங்கடம் ஏற்படும் வகையில் காட்சியை படமாக்க மாட்டோம் என்று கூறி அந்த காட்சியை படமாக்கினோம். அதன் பிறகு நான் அது போன்ற காட்சிகளில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் என்றார் தலிப்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X