twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பைரசி.. வாய் திறக்காத ரஜினி, கமல்... சிஸ்டம் சரியில்லை : தயாரிப்பாளர் அஸ்லாம் ஆவேசம் - exclusive

    திருட்டு டிவிடி பிரச்சினை தொடர்பாக ரஜினி, கமல் வாயை திறக்காமல் இருப்பதற்கு என்ன காரணம் என கேள்வி எழுப்பியுள்ளார் தயாரிப்பாளர் அஸ்லாம்.

    |

    சென்னை : திருட்டு டிவிடி பிரச்சினை தொடர்பாக ரஜினி, கமல் வாயை திறக்காமல் இருப்பதற்கு என்ன காரணம், தமிழ் சினிமாவில் சிஸ்டம் சரியில்லை என ஒன்இந்தியாவிற்கு அளித்த சிறப்புப் பேட்டியில் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் அஸ்லம்.

    சமீபகாலமாக தமிழ்த் திரைப்படங்கள் ரிலீஸ் அன்றே இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியாகி வருகிறது. ரஜினியின் காலா திரைப்பட ரிலீசின் போது பிரபல தமிழ் சினிமா பைரசி இணையதளமான தமிழ் ராக்கர்ஸ் பகிரங்கமாக, அப்படத்தை ரிலீசுக்கு முன்னதாகவே இணையத்தில் வெளியிடுவோம் என மிரட்டல் விடுத்தனர்.

    இவ்வாறு உடனுக்குடன் இணையத்தில் புதுப்படங்கள் பதிவேற்றம் செய்யப்படுவதால் அதிகம் பாதிக்கப்படுவது, அப்படங்களின் தயாரிப்பாளர்கள் தான். இந்த நிலை தொடர்ந்தால் வெகு விரைவில் சினிமா தயாரிப்பு அடியோடு அழிந்துவிடும் என்பது தான் அவர்களது கவலை.

    இது தொடர்பாக 'மனுசனா நீ' படத்தின் தயாரிப்பாளர் கஸாலியும், 'ஒரு குப்பைக் கதை' படத்தின் தயாரிப்பாளர் முகம்மது அஸ்லமும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களைச் சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அஸ்லம் ஒன்இந்தியாவிற்கு சிறப்புப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

    தயாரிப்பாளர்களுக்கே பாதிப்பு:

    தயாரிப்பாளர்களுக்கே பாதிப்பு:

    தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் தான் மிகவும் கஷ்படுகிறார்கள். ஒரு படம் வெற்றி பெற்றால் அதில் நடித்த நடிகர்களும், இயக்குனரும் நல்லா இருக்காங்க. ஆனா தயாரிப்பாளர் கஷ்டப்படுகிறார். அதன் லாபம் தயாரிப்பாளர்களுக்கு வந்து சேர்வதில்லை. இதற்கு முக்கிய காரணம் பைரசி தான். திருடர்கள் வேறு எங்கும் இல்லை. சினிமாவிலேயே தான் இருக்கிறார்கள். நல்ல படங்களை ஓடவைக்க வேண்டியது தியேட்டர்களின் கடமை. ஆனால் அவர்களே திருடர்களுக்கு துணை போதது எந்த வகையில் நியாயம்.

    சிறு பட்ஜெட் படங்கள்:

    சிறு பட்ஜெட் படங்கள்:

    பெரிய நடிகர்களின் படங்களுக்கு பிரச்சினை ஏற்படுவதில்லை. படம் ஓடிதான் சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. சேனல் ரைட்ஸ் உள்ளிட்ட வேறு வகைகளில் அவர்களுக்கு வியாபரம் நடந்துவிடுகிறது. ஆனால் எங்களை போன்று சிறு பட்ஜெட்டில், புதுமுக நடிகர்களை வைத்து படம் எடுப்பவர்களுக்கு தான் பிரச்சினை. தியேட்டரில் படம் ஓடினால் தான் எங்களால் வியாபாராம் செய்ய முடியும்.

    மறுப்பு:

    மறுப்பு:

    உங்கள் படங்களை இன்டர்நெட்டில் பார்த்துவிடுகிறார்கள் எனக்கூறி சாட்டிலைட் உரிமையை வாங்க மறுக்கிறார்கள். இதனை தடுக்க பெரிய நடிகர்கள், இயக்குனர்கள் ஏன் முன்வருவதில்லை. தயாரிப்பாளரின் கஷ்டத்தில் பங்கெடுக்க நடிகர்கள் மறுக்கிறார்கள்.

    சந்தேகம்:

    சந்தேகம்:

    தமிழ்ராக்கர்ஸ் என்ற ஒரு இணையதளம் தமிழ் சினிமாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. ஆனால் அதை பற்றி பேச யாரும் தயாராக இல்லை. நடிகர் விஷால், தன்னால் முடிந்த அளவிற்கு தயாரிப்பாளர் சங்கம் மூலமாக குழுக்கள் அமைத்து, பைரசியை தடுக்க முயல்கிறார். ஆனால் அவர் ஒருவரால் மட்டுமே அது எப்பது சாத்தியப்படும்.

    தமிழ்ராக்கர்ஸ்:

    தமிழ்ராக்கர்ஸ்:

    ஷங்கர் இவ்வளவு கஷ்டப்பட்டு படம் எடுக்கிறார். ஆனால் காலா படத்தை போல, அவரது படத்தையும் ரிலீஸ் அன்று காலையிலேயே தமிழ்ராக்கர்ஸ் வெளியிடும். ஆனால் அவர்கள் வாயை திறக்க மாட்டார்கள். ரஜினி, கமல், ஷங்கர் போன்ற பெரிய ஆட்கள் எல்லாம் இதுதொடர்பாக வாயை திறக்க ஏன் மறுக்கிறார்கள். தங்களுக்கு எல்லாவற்றையும் தந்த சினிமா அழிவதை அவர்கள் வேடிக்கை பார்க்கலாமா?

    போராட்டம்:

    போராட்டம்:

    இங்குள்ள தியேட்டர்களில் இருந்து தான் படங்கள் திருடப்படுகிறது. அது தெரிந்திருந்தும் உறுதியான நடவடிக்கை எடுக்கவோ, அதை பற்றி பேசவோ அவர்கள் மறுக்கிறார்கள். தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை என்கிறார் ரஜினி. உண்மையில் சினிமாவில் தான் சிஸ்டம் சரியில்லை. அதை பற்றி தான் அவர் முதலில் பேசியிருக்க வேண்டும். என்னால் முடிந்த வரை நான் போராடுகிறேன். அவ்வளவுதான் என்னால் முடியும்" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    Oru Kuppai kadhai movie producer director Aslam questions Rajini and Kamal that why there silent on cinema piracy issue.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X