For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  "சூடு" தாங்காமல் பணிந்த பிரவீண் காந்தி.. புலிப்பார்வையில் ஆட்சேபணை காட்சிகள் நீக்கம்!

  By Shankar
  |

  சென்னை: புலிப்பார்வை படத்தில் ஆட்சேபணைக்குரிய காட்சிகள் அனைத்தையும் நீக்குகிறோம் என்று இயக்குநர் பிரவீண் காந்தி கூறியுள்ளார்.

  விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இளைய மகன் பாலச்சந்திரனை சிங்கள ராணுவத்தினர் பிடித்து வைத்து முகாமில் சுட்டுக் கொன்றனர்.

  Director assures to remove objectionable scenes from Pulipaarvai

  பாலச்சந்திரன் வாழ்க்கை கதையை மையமாக வைத்து 'புலி பார்வை' என்ற பெயரில் சினிமா படம் தயாராகிறது. பிரவீன்காந்தி இயக்குகிறார். வேந்தர் மூவிஸ் சார்பாக மதன் தயாரிக்கிறார். இதில் புதுமுகங்கள் நடித்துள்ளார்.

  பாலசந்திரனை ராணுவ சீருடையில் இருப்பதுபோல் இந்த படத்தில் காட்சிகள் வைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தப் படம் வெளிவரவே கூடாது என 65 அமைப்புகளின் தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டதில், ஆடிப் போய்விட்டது தயாரிப்பாளர் பாரிவேந்தர் தரப்பு.

  இப்போது படத்தில் பல காட்சிகளை நீக்கும் வேலையில் இறங்கியுள்ளனர். இதுகுறித்து படத்தின் இயக்குனர் பிரவீன்காந்தி வெளியிட்டுள்ள அறிக்கை:

  தமிழினத்தின் பெருமையை கூறும் விதத்தில் மிகப் பிரம்மாண்டமாக யுத்த பின்னணியில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் படம் என்ற பெருமையோடு 'புலிப்பார்வை' படம் வெளிவர தயாராக உள்ளது.

  இலங்கையில் ராணுவத்திற்கும் விடுதலை புலிகளுக்குமான இறுதிக்கட்ட போரின்போது பிரபாகரனின் இரண்டாவது மகன் அநியாயமாக ராணுவத்தால் கொல்லப்பட்டதாக சேனல் 4 என்ற லண்டன் தொலைக்காட்சி அதிகாரப்பூர்வமாக சில புகைப்படத்தையும் வீடியோவையும் வெளியிட்டது. அதைக் கண்டு உலகநாடுகளே அதிர்ந்தது.

  அந்த கொடிய சம்பவத்தை மையக் கருவாகவும், பாலச்சந்திரனையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான் 'புலிப்பார்வை'. மாவீரனின் மகனை வீரனாக காட்டவும், பாலாவின் வீரத்தின் மூலம் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் புகழை இந்த உலகம் போற்றவும்தான் இப்படத்தில் பாலாவிற்கு சீருடை வழங்கப்பட்டது.

  'சீராளன்' என்ற படம் கண்டபின் என்னால் புலிகளையும், அவர்களின் போராட்டத்தையும் வீரத்தின் அடையாளமாக பார்க்கத் தூண்டியது. பிரபாகரன் கருத்துப்படி எடுக்கப்பட்ட அப்படம்தான் எனக்கு இன்ஸ்பிரேசன். ஆனால், பாலாவை சீருடையில் காட்டுவதன்மூலம் பாலாவை இளம் போராளியாக சித்தரித்ததாக படம் காணாத சிலருக்கு எண்ணம் எழுந்துள்ளது.

  பாலா இப்படத்தில் குழந்தைகள், சிறுவர்கள் போரில் ஈடுபடக்கூடாது என்பதை வலியுறுத்துவதுதான் அவரின் அறிமுகக் காட்சி. இதனை படம் கண்ட அனைவரும் அறிவர்.

  சீமான் படம் கண்டபின் முதல் கமெண்ட்ஸ், சிறப்பு சிறப்பு... பாலாவின் சீருடை பற்றி முதன்முதலில் அவர் எனக்கு விளக்கம் தந்தார். இயக்குனராக பாலாவை நீங்கள் வீரனாக பார்த்தது சரி. ஆனால், பாலா ஒரு பள்ளி மாணவன் என கூறினார்.

  சீமான் சீருடையில் சொன்ன கருத்தை நெடுமாறன் அவர்களும் சொன்னார்கள். இருவரின் கருத்துப்படி பாலாவின் சீருடையை மாற்றும் பணி நடந்து வருகிறது. மேலும் சீமான் கருத்துப்படியும். ஐயா நெடுமாறன் கூறிய கருத்துக்களின்படியும் சில வசனங்களை நீக்கிவிட்டோம். காட்சிகள் சிலவற்றையும் நீக்கிவிட்டோம்.

  சீமான் எதையெல்லாம் மாற்றம் செய்தால் படம் சிறப்பாக வரும் என்று கருத்து சொன்னாரோ, அதைத்தான் மாணவர்கள் அமைப்பும் சொல்லி வருகிறது. மாணவர்கள் கருத்தும் மதிக்கப்படுகிறது. மேலும் அனைத்து தமிழ் அமைப்புகளும் கருத்துக்கும் தலைவணங்கி சீருடை மாற்றும் பணி நடந்து வருகிறது.

  தமிழ் அமைப்புகள் கருத்துக்களையும், மாணவர்கள் கருத்தையும் அறிந்தே, இப்படத்தின் தயாரிப்பாளர் பாரிவேந்தர் தமிழர்களுக்காக எடுக்கப்படும் இப்படம் தமிழர்களின் மனமார்ந்த வரவேற்போடு வெளிவரவேண்டும். ஆதலால் சீருடைய எவ்வளவு செலவு செய்தாலும் மாற்றி விடுங்கள் என அனுமதி அளித்துள்ளார். அவரின் அறிவுரைப்படி இரவு, பகலாக பல தொழில்நுட்ப கலைஞர்களின் துணையோடு சீருடை மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.

  பாடல்கள், இசை என இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் இதில் அறிமுகமாகி உள்ளேன். பாடல்கள் யூடியூப்பில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

  - இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

  English summary
  Director Praveen Gandhi says that he would remove all the objectionable scenes from Pulipaarvai.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X