எளிய மக்களிடம் சொல்லப்படாத கதைகள் 1000 இருக்கு... அதியன் ஆதிரை
சென்னை: சொல்லப்படாத ஆயிரம் கதைகள் சாதாரண எளிய மக்களிடம் இருக்கின்றன என்று இயக்குனர் அதியன் ஆதிரை தெரிவித்துள்ளார். என்றுமே எங்களிடம் கதைகளுக்கு பஞ்சம் இருக்காது என்று கூறினார்.
"இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு" படம் அதிக அளவில் பேசப்படும் படமாகவும், வெற்றிப்படமாகவும் திரையரங்குகளில் வெற்றி கரமாக ஓடிக்கொண்டுள்ளது. இப்படத்தை, இயக்கிய இயக்குனருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையம் மற்றும் பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை இணைந்து இயக்குநர் அதியன் ஆதிரைக்கும் பாராட்டு விழா மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சியினை நடத்தினார்கள் .
இதில், அதியன் ஆதிரையிடம் பல சுவாரஸ்யமான மற்றும் ஆழ்ந்த கருத்தியல் தொடர்பான கேள்விகள் கேட்டப்பட்டன அதற்கு மிகவும் எளிமையாக பதில் அளித்தார்.

மேலும் போர் குறித்தும், அதன் விளைவுகள் குறித்துமான அதியனின் புரிந்துணர்வு வந்திருந்தோரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. மேலும், இந்திய சமூக அமைப்பின் சிக்கல்கள் குறித்தும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மிக எளிமையாக பதிலளித்து அனைவரையும் கவர்ந்தார்.

"சினிமாவில் கதைக்கு பஞ்சம் நிலவுவதாக கூறுகிறார்களே, இந்நேரத்தில் திரைக்கு வந்திருக்கும் நீங்கள் இதை எப்படி எதிர்கொள்வீர்கள்? நிஜமாகவே கதைக்கு பஞ்சம் இருக்கிறதா?" என்று கேள்வி எழுப்பினர்.
"இங்கே ஒரு தரப்பினரின் கதை மட்டும் தான் இத்தனை ஆண்டுகாலம் பேசப்பட்டு வருகிறது. அப்படி பட்டவர்களுக்கு வேண்டுமானால் கதைகள் தீர்ந்து போயிருக்கலாம், ஆனால் இன்னும் சொல்லப்படாமல் ஆயிரம் கதைகள் எளிய மக்களான எங்களிடம் இருக்கிறது. எங்களிடம் கதைகளுக்கு பஞ்சமில்லை" என்று நெத்தியடியாக பதில் அளித்தார்.

எப்போதும் தரமான கருத்துக்களை தன் படங்களில் சொல்லும் ரஞ்சித் அவர்களால் என் கதை வெளிவந்தது. அது போல இன்னும் நிறைய திறமை சாலிகள் வெளியில் இருக்கிறார்கள் அவர்களின் கதையும் வெளிவர வேண்டும் என்றுஇயக்குனர் அதியன் ஆதிரை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











