இயக்குநர் அட்லீ-பிரியா தம்பதிக்கு குழந்தை பிறந்தாச்சு..என்ன குழந்தை தெரியுமா?

சென்னை : இயக்குநர் அட்லீ, பிரியாவுக்கு குழந்தை பிறந்துள்ள மகிழ்ச்சியான செய்தியை, பிரியா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடியை பார்ப்பதற்கே மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

ராஜா ராணி

ராஜா ராணி

ராஜா ராணி என்ற தரமான காதல் கதையை கொடுத்து தமிழ் ரசிகர்கள் மனதில் நிரந்தரமான இடத்தை பிடித்து விட்டார் அட்லீ. காதல் வயப்படுபவர்கள் யாரும் காதலித்தவர்களை மணப்பதில்லை. ஆனால், அந்த முதல் காதல் மனதின் ஆழத்தில் என்றும் இருக்கும் என்ற எதார்த்த காதலை ராஜா ராணி படத்தில் லாவகமாக சொல்லி இருந்தார் அட்லீ. இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

ஜவான் படத்தில்

ஜவான் படத்தில்

வெற்றி இயக்குனர் என்ற முத்திரையை முதல் படத்திலேயே பெற்ற அட்லீ, தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என பிளாக் பஸ்டர் திரைப்படங்களை கொடுத்து பெயர் எடுத்துள்ளார். அட்லீ, தற்போது ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இதில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

காதல் ஜோடி

காதல் ஜோடி

பிரியா காதலித்து திருமணம் செய்து கொண்ட அட்லீ, எப்போதும் தனது மனைவி பிரியாவுடனே க்யூட்டாக காணப்படுகிறார். இந்த லவ்வபிள் ஜோடியை பார்க்கும் போது நமக்கே சற்று பொறாமை எட்டிப்பார்க்கும் அளவுக்கு அம்சமான தம்பதிகளாக உள்ளனர். இதையடுத்து, 8 ஆண்டுகளுக்குபிறகு கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டு இருந்தார்.

குழந்தை பிறந்தாச்சு

குழந்தை பிறந்தாச்சு

இந்நிலையில், இயக்குநர் அட்லீ பிரியா அட்லீ தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை பிரியா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், எல்லோரும் சொன்னது சரிதான். இப்படி ஓர் உணர்வு உலகில் இல்லை. அது போலவே இப்போது எங்களது மகன் இங்கு உள்ளார். பெற்றோர் எனும் பயணத்தை நாங்கள் இனிதே இன்று தொடங்குகிறோம் என பிரியா தெரிவித்துள்ளார். அட்லீ பிரியாவுக்கு ரசிகர்கள் இணையத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X