Atlee - ஜவான் அடித்த ஜாக்பாட்.. அம்பானி வீட்டுக்குள் நுழைந்த அட்லீ.. வேற மாதிரி இருக்காரே

சென்னை: Atlee (அட்லீ) ஜவான் படம் ஹிட்டடித்ததை அடுத்து இயக்குநர் அட்லீ தனது மனைவி ப்ரியாவுடன் அம்பானி வீட்டுக்கு சென்றார்.

ராஜா ராணி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. முதல் படமே மெகா ஹிட்டாகி நூறு நாட்கள் ஓடியது. படத்தின் மேக்கிங்கும் அட்டகாசமாக இருக்கிறது என்று பேசப்பட்டது. அதேசமயம் அந்தப் படம் அப்படியே மௌன ராகம் படத்தின் அப்டேட் வெர்ஷன் என்ற விமர்சனம் எழுந்தது. ஆனால் அதுகுறித்து அட்லீ எந்த பதிலும் சொல்லாமல் இருந்தார்.

Director Atlee and his wife Priya went to Ambanis house after Jawan became a hit

காப்பி கேட்: இதனையடுத்து அவர் இயக்கிய தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களில் பிகிலை தவிர்த்து தெறியும், மெர்சலும் மெகா ஹிட்டாகின. ஆனால் தெறி படம் சத்ரியன் படத்தின் காப்பி என்றும், மெர்சல் படம் அபூர்வ சகோதரர்கள் படத்தின் காப்பி என்றும், பிகில் சக் தே இந்தியா படத்தின் காப்பி என்றும் விமர்சனம் எழுந்தது. அதுமட்டுமின்றி பல காட்சிகளும் அப்படியே இருப்பதாக ரசிகர்கள் ஓபனாக பேச ஆரம்பித்தனர்.

இவ்வளவா?: ஒரு இயக்குநர் ஒரு படத்தில் காப்பி அடிக்கலாம் ஆனால் தான் எடுக்கும் ஒவ்வொரு படத்தையும் காப்பி அடிக்கக்கூடாது. அட்லீயால் சொந்தமாக ஒரு லைனைக்கூட யோசிக்க முடியாது என்று ஓபனாகவே பேச ஆரம்பித்தனர். இதுகுறித்து பேசியிருந்த அட்லீ 7 ஸ்வரங்களுக்குள்தானே ட்யூன் போட முடியும் என்று பலே விளக்கம் அளித்தார்.

காப்பி ஜவான்: இப்படி பல விமர்சனங்களை சந்தித்தாலும் அட்லீ தற்போது ஹிந்தியில் எண்ட்ரி கொடுத்துள்ளார். அவர் இயக்கி ஷாருக்கான் நடித்திருக்கும் ஜவான் படம் இதுவரை 880 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. ஆனால் இந்தப் படமும் காப்பி என்ற விமர்சனத்தை சந்தித்திருக்கிறது. முக்கியமாக அவர் தனது படத்திலிருந்தே பல காட்சிகளை உருவியிருக்கிறார். கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட படங்கள் ஜவான் படத்துக்குள் இருக்கின்றன என ரசிகர்கள் வறுத்தெடுத்தனர்.

அம்பானி வீட்டில்: எது எப்படி இருந்தாலும் ஜவான் படம் வணிக ரீதியாக பெரும் வெற்றி பெற்றிருக்கிறது என்பதுதான் உண்மை. அதனால் அட்லீக்கு அடுத்தடுத்து ஹிந்தி பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி பூஜையை முன்னிட்டு அட்லீ அவரது மனைவி ப்ரியா ஆகியோ முகேஷ் அம்பானி வீட்டுக்கு சென்றனர்.

Director Atlee and his wife Priya went to Ambanis house after Jawan became a hit

அதேபோல் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனும் அம்பானி வீட்டு பூஜையில் கலந்துகொண்டனர். அவர்கள் தவிர்த்து தீபிகா படுகோனே, ரன்வீர சிங் உள்ளிட்டோரும் அந்த பூஜையில் கலந்துகொண்டனர். இதை கவனித்த நெட்டிசன்கள் ஜவான் என்ற ஒரே ஒரு படத்தின் மூலம் அம்பானி வீட்டுக்குள்ளேயே அட்லீ நுழைந்துவிட்டாரே. இனி அவர் காட்டில் மழைதான் என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். அடுத்தாகவும் ஷாருக்கானை வைத்து அவர் படம் இயக்கப்போகிறார் என்று தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X