Anant Ambani: அம்பானி வீட்டு கல்யாணம்.. மாஸ் என்ட்ரி கொடுத்த அட்லீ!

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படத்திற்கு பிறகு உலகமே கொண்டாடும் இயக்குநராக மாறி இருக்கிறார் அட்லீ. இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது மனைவியுடன் சென்றுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானி தம்பதியரின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்செண்டுக்கும் வரும் ஜூலை மாதம் 12ந் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. அதற்கான முன் திருமண வைபவங்கள் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் கோலாகலமாக நடந்து வருகிறது. ஏற்கனவே மகள் இஷா அம்பானி மற்றும் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணங்களை வெகு விமர்சையாக நடத்தி முடித்த முகேஷ் அம்பானி, இளைய மகன் ஆனந்த் அம்பானி திருமணத்தை மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்.

Director atlee attended anant ambani and radhika pre wedding event

அம்பானி வீட்டு கல்யாணம்: ரிலையன்ஸ் குழுமத்தின் சில்லரை வர்த்தகம், ஜியோ தளங்களை கவனித்து வரும் ஆனந்த் அம்பானி, தொழிலதிபர் வீரேன் மெர்செண்டின் மகளான ராதிகா மெர்செண்டை திருமணம் செய்ய உள்ளார். இவர்களுக்கு 2023 ம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தற்போது, ஜாம்நகரில் துவங்கியுள்ள முன் திருமண வைபவங்கள், ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வையும் ஜாம்நகரின் மீது உள்ளது.

விழாக்கோலம் பூண்ட ஜாம்நகர்: பிப்ரவரி 28-ம் தேதி முதலே விழாக்கோலம் பூண்ட ஜாம்நகரில், அம்பானி குடும்ப உறுப்பினர்களால் அங்குள்ள ஜோக்வாட் கிராம மக்களுக்கு பாரம்பரிய குஜராத்தி உணவுகள் விருந்தளிக்கப்பட்டது. கிராம மக்களுக்கு முகேஷ் அம்பானி, நீடா அம்பானி, ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்செண்ட் உள்ளிட்டோர் உணவு பரிமாறிய காட்சிகள் சமூக வலைத்தளத்தில் டிரெண்டானது. மேலும், உலக புகழ்பெற்ற பாடகி ரிஹானா மற்றும் குழுவினர், பிரபல பாடகர் பி பிராக், இசைக் கலைஞர்கள் அரிஜித் சிங், அஜய் அதுல், தில்ஜித் டோசன்ஜ் மற்றும் மேஜிக் கலைஞர் டேவிட் பிளேன் உள்ளிட்டோர் ஆனந்த் அம்பானியின் முன் திருமண வைபவங்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.

மாஸ் என்ட்ரி: இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக உலக நாடுகளின் பிரபலங்கள் முதல் உள்ளூர் பிரபலங்கள் வரை ஜாம்நகரில் குவிந்துள்ளனர். குறிப்பாக மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், ஃபேஸ்புக் மற்றும் மெட்டா நிறுவனத் தலைவர் மார்க் சக்கர்பெர்க், டிஸ்னி நிறுவன சி.இ.ஓ பாப் இகர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான உலக பிரபலங்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். திரைப்பிரபலங்களான, அமிதாப் பச்சன், ஷாரூக் கான், ரஜினிகாந்த், தீபிகா படுகோன் உள்ளிட்டோரும் ஆனந்த் அம்பானியின் முன் திருமண வைபவ நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் பங்கேற்ற நிலையில், ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் மாஸ்காட்டிய அட்லீ, தனது மனைவி மற்றும் குழந்தையுடன் திருமண முன் வைபவத்தில் கலந்து கொண்டார். இந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X