Atlee: அட்லிக்கு பெண் குழந்தை.. மீருக்கு தங்கச்சி பாப்பா பொறந்துடுச்சு.. பிரியா அட்லி செம ஹேப்பி!

சென்னை: விஜய் டிவியின் காணா காணும் காலங்கள் தொடரில் பிரியா நடித்துக் கொண்டிருந்தபோது உதவி இயக்குநராக ஷங்கரிடம் பணியாற்றி வந்த அட்லிக்கு அவர் மீது காதல் ஏற்பட்டது. ராஜா ராணி படத்தை இயக்கி இயக்குநராக முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த அட்லி பிரியாவை திருமணம் செய்துக் கொண்டார்.

விஜய்யுடன் தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் பாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்டுகளை படைத்த அட்லி குருவை மிஞ்சிய சிஷ்யனாக பாலிவுட்டுக்குச் சென்று ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி 1100 கோடி வசூல் சாதனையை சொந்தமாக்கினார்.

Director Atlee blessed with Girl Baby and show his happiness on social media

ஏற்கனவே அவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், தற்போது அட்லிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த அறிவிப்பை சற்றுமுன் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் சந்தோஷமாக தெரிவித்துள்ளார் அட்லி.

அட்லிக்கு பெண் குழந்தை: இயக்குநர் அட்லிக்கு ஏற்கனவே மீர் எனும் ஒரு மகன் உள்ள நிலையில், அவரது மனைவி பிரியா அட்லி மீண்டும் கர்ப்பமாக இருந்ததை சமீபத்தில் அறிவித்தனர். நடிகர் விஜய் மும்பைக்குச் சென்று ப்ரியா அட்லியின் வளைகாப்பு நிகழ்ச்சியிலும் சமீபத்தில் பங்கேற்றார். இந்நிலையில், அட்லி தனக்கு மகள் பிறந்துள்ளார் என்கிற சந்தோஷமான செய்தியை அறிவித்துள்ளார்.

மீருக்கு தங்கச்சி பாப்பா: அட்லி தனது சமூக வலைதள பக்கங்களில் மீருக்கு தங்கச்சி பாப்பா பிறந்துள்ளார் என்றே அறிவித்துள்ளார். மீர் உடைய அழகான பென்சில் ஆர்ட் போட்டோவை வெளியிட்டு இந்த அறிவிப்பை அட்லி வெளியிட்டுள்ளார். ப்ரியா அட்லி மற்றும் பெண் குழந்தை இருவரும் நலமுடம் இருப்பதாக அட்லி தெரிவித்துள்ளார்.

அல்லு அர்ஜுன் படம்: ஷாருக்கானின் ஜவான் படத்திற்கு பிறகு அட்லி அல்லு அர்ஜுன், தீபிகா படுகோன் வைத்து ராக்கா படத்தை இயக்கி வருகிறார். நடிகை தீபிகா படுகோனும் 2வது முறை கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அட்லிக்கும் 2வது குழந்தை பிறந்துள்ளது. புஷ்பா 2 படத்தை விட பெரிய படமாக ராக்கா இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அட்லிக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X