அட்லியுடன் இணைந்து நடனமாடிய விஜய்.. சமூக வலைதளங்களில் வெளியான வேற லெவல் வீடியோ!

சென்னை : இயக்குநர் அட்லி விஜய்யின் தெறி, மெர்சல் மற்றும் பிகில் என ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தவர்.

தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார்.

படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக வெளியாகவுள்ள நிலையில், தன்னுடைய பிறந்தநாளை நேற்றைய தினம் அட்லி கொண்டாடியுள்ளார்.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

நடிகர் விஜய்யின் கேரியரில் சிறப்பான படங்களா அமைந்தவை தெறி, மெர்சல் மற்றும் பிகில். இந்தப் படங்கள் சிறப்பான வசூலையும் விமர்சனங்களையும் பெற்று ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தன. இந்தப் படங்களை இயக்கி விஜய்க்கு மட்டுமில்லாமல் அவரது ரசிகர்களும் பிடித்தமானவராக மாறினார் அட்லி.

ஹாட்ரிக் வெற்றி

ஹாட்ரிக் வெற்றி

இந்தப் படங்களின் வெற்றி விழாக் கொண்டாட்டங்களில் விஜய் குறித்து அவர் தெரிவித்த கருத்துக்களும் வைரலாகின. தனக்கு கூடப்பிறந்த சகோதரர் இல்லாத நிலையில், விஜய் தனக்கு அண்ணனாகியுள்ளதாக அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துக் கொண்டார். இந்தக் கருத்துக்களின் மூலமும் அட்லி விஜய் ரசிகர்களின் பேவரிட்டாக மாறினார்.

ஷாருக்கை இயக்கும் அட்லி

ஷாருக்கை இயக்கும் அட்லி

விஜய்யின் இந்தப் படங்களின் மேக்கிங் மற்றும் வெற்றியை தொடர்ந்து இவருக்கு பாலிவுட்டில் ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது ஷாருக்கின் ஜவான் படத்தை எடுத்து வருகிறார் அட்லி. சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.

அட்லி பிறந்தநாள் கொண்டாட்டம்

அட்லி பிறந்தநாள் கொண்டாட்டம்

இந்தப் படத்தில் ஷாருக்கிற்கு ஜோடியாகியுள்ளார் நயன்தாரா. மேலும் விஜய்யும் இந்தப் படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே நேற்றைய தினம் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை சிறப்பாக மேற்கொண்டுள்ளார் அடலி. இதில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.

விஜய் -ஷாருக்கான் பங்கேற்பு

விஜய் -ஷாருக்கான் பங்கேற்பு

இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்டே விஜய் மற்றும் ஷாருக்கான் இருவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அவர்களுடன் தான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அட்லி, இதைவிட தன்னுடைய பிறந்தநாளுக்கு வேறு என்ன கிப்ட் வேண்டும் என்று கேள்வியெழுப்பியுள்ளார். எப்போதும் இதுபோன்ற கொண்டாட்டங்களில் பங்கேற்காத விஜய், இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அட்லியுடன் நடனமாடிய விஜய்

அட்லியுடன் நடனமாடிய விஜய்

முன்னதாக ஷங்கரின் நண்பன் படத்தில் அட்லி உதவி இயக்குநராக இருந்த நிலையில், இந்தப் படத்தின் சக்சஸ் மீட்டில் விஜய், அட்லி, ஜீவா, ஸ்ரீகாந்த் உள்ளிட்டவர்கள் இணைந்து ஆடிய நடன வீடியோ, தற்போது அட்லி பிறந்தநாளையொட்டி வெளியாகி வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X