Atlee: ராஜா ராணி முதல் ஜவான் வரை.. மாஸ் இயக்குநர் அட்லீயின் பிறந்தநாள் இன்று!
சென்னை: இயக்குநர் அட்லீ, ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சந்தானம் என முன்னணி நடிகர்களுடன் தன்னுடைய என்ட்ரியை துவங்கினார்.
இந்தப் படத்தை தொடர்ந்து அவருக்கு விஜய்யின் அடுத்தடுத்த 3 படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், அதை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார்.
சமீபத்தில் அவருடைய ஜவான் படம் ரிலீசாகி 900 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் அட்லீ.

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இயக்குநர் அட்லீ: இயக்குநர் அட்லீயின் பயணம் தமிழில் ராஜா ராணி என்ற படத்தில்தான் துவங்கியது. முதல் படத்திலேயே ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சந்தானம் என முன்னணி நடிகர்களை வைத்து இயக்கும் வாய்ப்பு அட்லீக்கு கிடைத்த நிலையில், அதை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார் அட்லீ. முதல் படத்திலேயே மிகச்சிறப்பான வெறறியை சாத்தயமாக்கினார். இந்தப் படம் அடுத்தடுத்த விஜய் படங்களை இயக்கும் வாய்ப்பை அவருக்கு ஏற்படுத்தித் தந்தது.
மெர்சல், தெறி, பிகில் என அடுத்தடுத்த விஜய் படங்களை இயக்கி ஹாட்ரிக் வெற்றியை கொடுத்த அட்லீ, இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு பிரபரங்கள் பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பிறந்தநாளையொட்டி ட்விட்டரிலும் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் அட்லீ காணப்பட்டார். தற்போது பாலிவுட்டிலும் தன்னை சிறப்பான வகையில் வெளிப்படுத்தியுள்ளார் அட்லீ.
ஜவான் படத்தின்மூலம் பாலிவுட்டிலும் முன்னணி நடிகரான ஷாருக்கானை இயக்கி மிகச்சிறப்பான வெற்றியை கொடுத்துள்ளார். இந்தப் படம் தற்போது சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 900 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளது. விரைவில் 1000 கோடி ரூபாய் கிளப்பில் இந்தப் படம் இணையவுள்தாக கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அட்லீயும் 1000 கோடி ரூபாய் இயக்குநர் கிளப்பில் இணைவார் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அட்லீயின் அடுத்தப்படம் குறித்தே தற்போது மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
அடுத்ததாக கரண் ஜோகர் தயாரிப்பில் அட்லீ படமியக்கவுள்ளதாகவும் இதற்காக அவருக்கு 60 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனிடையே விஜய்யின் அடுத்தப்படத்தை அட்லீ இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படங்களில் அடுத்ததாக எந்தப் படத்தை அட்லீ தேர்வு செய்வார் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். சமீபத்தில் அட்லீ -பிரியா தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளது.
இதையடுத்து தன்னுடைய குழந்தையுடன் தான் 4 மாதங்கள் கழிக்க உள்ளதாக அட்லீ முன்னதாக ஜவான் படத்தின் ரிலீசின்போது தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரது பட அறிவிப்பு இன்னும் சில மாதங்கள் கழித்தே வெளியாகும் என்று கூறப்படுகிறது. தற்போது லியோ படத்தை முடித்துவிட்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் அக்டோபர் மாதத்தில்தான் விஜய் இணையவுள்ளார். அதனால் விஜய் -அட்லீ காம்பினேஷன் தளபதி69ல் நிகழுமா என்று ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
எப்போதுமே மற்ற படங்களில் இருந்து காட்சிகளை எடுத்து தன்னுடைய படங்களில் பயன்படுத்துகிறார் என்ற விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார் அட்லீ. ஜவான் படத்திலும் பல படங்களின் காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனாலும் இந்த இளம் வயதிலேயே மிகப்பெரிய வெற்றி இயக்குநராக மாறியுள்ளார். முன்னணி இயக்குநர்களான ஷங்கர் உள்ளிட்டவர்களின் சம்பளத்தைவிட அட்லீயின் சம்பளம் தற்போது உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











