Vinayagar Chaturthi 2024: விநாயகர் சதூர்த்தி கொண்டாடிய நட்சத்திர தம்பதி.. எவ்வளவு அழகா இருக்காங்க!
மும்பை: தமிழ் சினிமாவில் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கி தற்போது ஹிந்தி திரை உலகில் மோஸ்ட் வான்டேட் இயக்குநராக மாறி உள்ளவர் அட்லீ. தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என தொடர்ந்து வெற்றிப் படங்களை இயக்கிய அட்லீ அதன் பின்னர் பாலிவுட்டில் ஷாரூக்கானின் அழைப்பினை ஏற்று, அவருக்கு கதை உருவாக்கி படம் இயக்கினார். ஜவான் என்ற பெயரில் வெளியான இந்தப் படம் ஹிந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. குறிப்பாக ரூபாய் 1000 கோடி வசூலை அசால்ட்டாக அள்ளியது.
மேலும் படம் பேசிய அரசியல் இதுவரை மற்ற ஹிந்திப் படங்கள் பேசாத அரசியல் என்பதால் பட்டி தொட்டியெங்கும் படம் செம ஹிட் ஆனது. இயக்குநர் அட்லீ தற்போது மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் அவர் அங்கு தனது மனைவி மற்றும் குழந்தையுடன் விநாயகர் சதூர்த்தி கொண்டாடியுள்ளார். அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

இயக்குநர் அட்லீ தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கப்படும் கமர்சியல் பட இயக்குநராக வலம் வந்தவர். ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என தான் இயக்கிய அனைத்துப் படங்களுமே தமிழில் சக்கைபோடு போட்டது. இதுமட்டும் இல்லாமல் வசூலிலும் பாக்ஸ் ஆஃபீஸ் வின்னராக இருந்தார். நடிகர் விஜயை வைத்து தொடர்ந்து மூன்று படங்கள் இயக்கினார். இந்த மூன்று படங்களும் பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் மழை பொழிந்தது. நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் என்பதால், விஜய்க்கு பல மாஸ் காட்சிகள் படத்தில் வைத்து அசத்தினார்.

ஷாரூக்கான்: இவரது பிகில் படம் ஷாருக்கானின் நடிப்பில் வெளியான சக்டே இந்தியா என்ற படத்தினைப்போல் உள்ளது என பலரும் கூறி வந்த நிலையில், ஷாரூக்கான் நேரடியாக அட்லீயை அழைத்து, தனக்கு ஒரு படம் செய்து கொடுக்க முடியுமா என கேட்கவைத்தது. அட்லீ மற்றும் ஷாரூக்கான் கூட்டணியில் உருவான படம்தான் ஜவான். இந்தப் படத்தை ஷாரூக்கானே தயாரித்தார். இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இந்தப் படத்திற்கு இசை அமைத்தற்காக அனிருத் பல விருதுகளை பெற்று வருகின்றார். மேலும் படம் பேசிய அரசியல் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக பல இடங்களில் தோல்வியைச் சந்திக்க முக்கிய காரணம் என வட இந்தியாவில் பரவலாக பேசப்பட்டது.

பாலிவுட் நடிகர்கள்: பாலிவுட்டில் தான் இயக்கிய ஒற்றைப் படத்தின் மூலம், பெரும் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ள அட்லீ, அடுத்தும் பாலிவுட்டின் மிகப்பெரிய நடிகரை வைத்து படம் இயக்கவுள்ளார் என கூறப்படுகின்றது. சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற அம்பானி வீட்டு திருமண கொண்டாட்டத்திக் அட்லீயைப் பார்த்த பாலிவுட் ஜாம்பவான் நடிகர்கள், அட்லீ பின்னால் பட வாய்ப்புக்காக் சுற்றுவதைப் போல், விளையாட்டாக செய்து காட்டினர். ஆனால் உண்மையிலேயே, அட்லீ தனக்கு ஒரு படம் பண்ணமாட்டாரா என பல முன்னணி நடிகர்கள் காத்துக் கொண்டு உள்ளனர்.
விநாயகர் சதூர்த்தி: குடும்பத்துடன் மும்பையிலேயே செட்டில் ஆகியுள்ள அட்லீ, தனது மனைவி ப்ரியா அட்லீ மற்றும் குழந்தையுடன் இணைந்து நேற்று அதாவது செப்டம்பர் 7ஆம் தேதி, அவர்களது வீட்டில் விநாயகர் சதூர்த்தி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அட்லீ தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு பலரும் லைக் போட்டு வருகின்றனர். அதேபோல் பாலிவுட் நடிகை சம்யுக்தா தனது வீட்டில் விநாயகர் சதூர்த்தி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அவரது சமூல வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். நடிகை நயன்தாரா அவரது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் அவர்களது குழந்தைகள் என அவர்கள் அனைவரும் அவர்களது வீட்டில் விநாயகர் சதூர்த்தி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











