அம்பானி வீட்டு கல்யாணம்! 10 நிமிட அனிமேஷன் படத்தை இயக்கிய அட்லீ! வாய்ஸ் ஓவர் கொடுத்த அமிதாப் பச்சன்!

மும்பை: இந்தியா மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் உள்ள அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் அதிகம் பேசப்பட்ட ஒரு விஷயம் என்றால் அது இந்தியாவின் நெம்பர் ஒன் பணக்காரராக உள்ள முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்செண்ட் திருமணம் குறித்துதான். சினிமாக்களில் குறிப்பிடுவதைப் போல் அரசியல்வாதிகள் தொடங்கி சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், பணக்காரர்கள், முக்கிய புள்ளிகள் என அனைவரும் ஒரே இடத்தில் குழுமியிருந்தனர்.

இந்திய அளவிலான பிரபலங்கள் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் பிரபலங்கள் வரவழைக்கப்பட்டனர். இந்த திருமணத்தின்போது மட்டும் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பிரைவேட் ஜெட்கள் வந்துள்ளன. மாப்பிள்ளை தோழர்களாக இருந்த பாலிவுட் நடிகர்களுக்கு ரூபாய் 2 கோடி மதிப்பிலான வாட்ச் பரிசாக கொடுக்கப்பட்டது.

Atlee Amitabh Bachchan

மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் தனித்தனியே அறைகள் எடுத்து, மிகப்பெரிய ஸ்டார் ஹோட்டல்களில் தங்கவைக்கபப்ட்டனர். வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட திரைப்பிரபலங்கள் தொடங்கி பாப் பாடகர்கள் வரை அனைவருக்கும் பல கோடிகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட இசைக் கச்சேரிகள் அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளன.

சூப்பர் ஸ்டார்: இதுமட்டும் இல்லாமல் மணமகன் ஆனந்த் அம்பானியுடன் இணைந்து பல திரைப்பிரபலங்களும் நடனமாடிய வீடியோ இணையத்தில் உலா வந்தது. குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடனமாடிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. நடிகைகள் பலரும் குத்தாட்டம் போட்டனர். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் உலா வந்தது. ஒருசில நடிகைகள் கச்சிதமாக உடை அணைந்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். பல நடிகைகள் கிளாமராக உடை அணிந்து வந்து இந்திய அளவில் மட்டும் இல்லாமல் உலக அளவிலும் ட்ரெண்ட் ஆனார்கள்.

Atlee Amitabh Bachchan

ஐஸ்வர்யா ராய்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாரூக்கான் ஆகியோர் அமிதாப் பச்சன் காலில் விழுந்து மரியாதை செய்யும் வீடியோக்களும் இணையத்தில் உலா வந்தது. ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது கணவர் அபிஷேக் பச்சான் இருவரும் தனித்தனியே திருமணத்தில் கலந்து கொண்டனர். இதனால் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்யவுள்ளனர் எனக்கூட யூகங்கள் கிளம்பியது. ஒரு சிலர் அவர்கள் இருவரும் திருமண மோதிரம் அணியவில்லை என்பது வரை கவனித்திருந்தனர்.

அட்லீ: தமிழ்நாட்டில் இருந்து, இயக்குநர் அட்லி தனது மனைவியுடன் கலந்து கொண்டார். அதேபோல், நயன் - விக்கி தம்பதியர், ஜோ - சூர்யா தம்பதியரும் கலந்து கொண்டனர். இதில் ஜவான் படத்தில் இருந்து மும்பைக்கு குடிபெயர்ந்துள்ள அட்லீ, ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்செண்ட் ஆகியோர் திருமண கொண்டாட்டத்தின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து நடைபெறும் இந்த திருமணக் கொண்டாட்டத்தில் அட்லீ தனது மனைவியுடன் அட்டன்டன்ஸ் போட்டுக்கொண்டே உள்ளார்.

Atlee Amitabh Bachchan

10 நிமிட அனிமேஷன் படம்: இந்நிலையில் திருமணத்தின் இரண்டாவது நாளில் அட்லி இயக்கி, அமிதாப் பச்சன் வாய்ஸ் ஓவர் கொடுத்த 10 நிமிட அனிமேஷன் படம் விருந்தினர்களுக்காக பிரத்யேகமாக ஒளிபரப்பட்டுள்ளது. இந்த வீடியோ உருவாக்கத்திற்காக அட்லீக்கு ஒரு படத்தினை இயக்க எவ்வளவு சம்பளமாக பெறுகின்றாரோ அதே சம்பளத்தை அம்பானி தரப்பில் இருந்து வழங்கியதாக கூறப்படுகின்றது. இது தொடர்பான தகவலை பிரபல யூட்யூபர் ரன்வீர் அல்லாபாடியா பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X