நான் காப்பி அடிக்கல.. இதுதான் உண்மை.. அட்லீ அதிரடி பேச்சு!
சென்னை: பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்த ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த அட்லீ, ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அவர் இயக்கிய முதல் திரைப்படமே மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற்றதைத் தொடர்ந்து, விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் அடுத்தடுத்து வெற்றிப்படத்தை கொடுத்த அட்லீ, பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான வைத்து ஜவான் படத்தை இயக்கி, பாலிவுட்டின் முன்னணி இயக்குநராக மாறி உள்ளார். இவருக்கு சத்யபாமா பல்கலைக்கழகத்தின் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
அப்போது பேசிய அட்லீ, எனக்கு கொஞ்ச நாளாக பொய் சொன்னால், இருமல் வந்துவிடுகிறது. இப்போது நான் எதாவது பொய் சொன்னால் இரும்பி விடுவேன் என்று பேசத் தொடங்கினார் அட்லீ. நாம் ஊருக்கு என்னவாக இருந்தாலும், வீட்டுக்கு அரசன் என்று சொல்வார்கள். அரசனாக வேண்டும் என்றால், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும், போருக்கு செல்ல வேண்டும். ஆனால், இது எல்லாம் செய்வதற்கு முன்பே நம்மை அரசனாக்கி அழகு பார்த்தவர்கள் நம் பெற்றோர். ஆனால், இந்த கல்லூரி என்னை ஆரம்பத்தில் இருந்தே வெற்றியாளனாகவே பார்த்தது. அதற்கு சத்யபாமா பல்கலைக்கழகத்திற்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இயக்குநர் அட்லீ: பொதுவாக என்னுடைய படங்களை நான் அங்கிருந்து எடுத்தேன், இங்கிருந்து எடுத்தேன் என்று சொல்வார்கள். ஆனால், நான் இப்போது ஒரு உண்மையை சொல்லப் போகிறேன். நான் என்னுடைய வாழ்க்கையில் நான் பார்த்த விஷயங்களைத்தான் எடுக்கிறேன். உங்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், 'பிகில்' படத்தில் வரும் ராயப்பன் கதாபாத்திரத்தை என்னுடைய தலைவன், ஜேபிஆர் இடமிருந்து தான் எழுதினேன். அவரை நீங்கள் பலர் பார்த்து இருக்க வாய்ப்பு இல்லை, ஆனால், அவரின் பேச்சு நடையில் எப்போதும், கம்பீரமும், நேர்மையும் இருக்கும். ஜேபிஆர் பலரின் கல்விக்கு உதவி செய்து வருகிறார் என்பது பலருக்கும் தெரியும். ஆனால், விளையாட்டு பெரும் துணையாக, ஊக்கம் அளித்தவர் அவர்.
நான் காப்பி அடிக்கல: நான் இந்த கல்லூரியில் சேர்ந்தவுடனே ஒரு குறும்படம் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். படிப்பு தான் முக்கியம், இப்போது எதுக்கு இந்த வேலை என்று சொல்லாமல், ஜேபிஆர் சார் அவர்கேமிராவை எடுத்துக்கோ நல்ல படம் எடு சீக்கிரம் இயக்குநராக மாறு என்று அசீர்வாதம் செய்தார். அவரின் ஆசிர்வாதம் இன்று என்னை ஒரு இயக்குநராக ஆக்கி இருக்கிறது. இன்று நான் ஒரு பெரிய இயக்குநராக இருக்கலாம். ஆனால் சினிமாத் துறையில் நிலைத்திருக்க வேண்டும் என்றால் நெருப்பில் நிற்பதை போன்றது. நான் இந்த டாக்டர் பட்டத்துக்கு நான் எவ்வளவு தகுதியானவன் என்று எனக்கு தெரியவில்லை இவ்வாறு அட்லீ மேடையில் பேசினார்.
இதையடுத்து, செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அட்லீ, அல்லு அர்ஜுனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க வருக்கிறேன். அந்த திரைப்படத்தை, கலாநிதி மாறன் அவர்கள் தயாரிக்கிறார். இதுவரைக்கும் இந்தியாவில் அதாவது தமிழ்நாட்டில் தயாரித்த படங்களை விட இந்த திரைப்படத்தினுடைய பட்ஜெட் மிகப்பெரிய அளவில் இருக்கும். இந்த படத்தில் நிறைய டெக்னாலஜி விஷயங்கள் இருக்கும். இந்த திரைப்படம் அனைவருக்கும் ஒரு பெருமை சேர்க்கும் திரைப்படமாக இருக்கும். படம் எப்போது வெளியாகும் என்பதை தயாரிப்பு நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என்றார்.


Click it and Unblock the Notifications











