என்னது பிகில் 2வை அட்லி இயக்க போறாரா? அதுவும் எந்த கேரக்டரை வச்சி தெரியுமா?

சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் படம் சிறப்பான வரவேற்பையும் வசூலையும் பெற்றது.

முன்னதாக விஜய்யை வைத்து தெறி, மெர்சல் படங்களையும் இயக்கியிருந்தார் இயக்குநர் அட்லி. அவரது ராஜா ராணி படத்தின் வெற்றி விஜய் படத்தை இயக்க அவருக்கு வாய்ப்பை பெற்றுத் தந்தது.

இந்த மூன்று படங்களுமே விஜய்யின் வெற்றிப்பட வரிசையில் சிறப்பான படங்களாக இடம்பெற்றுள்ளன.

3 படங்களில் இணைந்த விஜய் -அட்லி

3 படங்களில் இணைந்த விஜய் -அட்லி

நடிகர் விஜய் நடிப்பில் அடுத்தடுத்து 3 படங்களை இயக்குநர் அட்லி இயக்கியிருந்தார். தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மூன்று படங்களுமே விஜய்யின் சிறப்பான வெற்றிப் படங்களில் இடம்பெற்றன. இந்தப் படங்களை ரசிகர்களின் நாடித்துடிப்பை உணர்ந்து சிறப்பான கதைக்களம் மற்றும் காட்சிகளுடன் கொடுத்திருந்தார் அட்லி.

முன்னணி இயக்குநர்

முன்னணி இயக்குநர்

இந்தப் படங்களின் தொடர் வெற்றி அவரை இந்திய அளவில் சிறப்பான இயக்குநராக மாற்றியுள்ளது. தற்போது ஷாருக்கானை வைத்து அவர் பாலிவுட்டில் படமியக்கி வருகிறார். மேலும் அடுத்ததாக விஜய் படத்தை இயக்கவுள்ள டைரக்டர்களில் இவரது பெயரும் உள்ளது. விரைவில் விஜய் -அட்லி கூட்டணி மீண்டும் இணையவேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ராயப்பன் கேரக்டர்

ராயப்பன் கேரக்டர்

பிகில் படத்தில் புட்பால் கோச்சாக விஜய் நடித்திருந்த கதாபாத்திரம் சிறப்பான வரவேற்பை பெற்றது. மேலும் படத்தில் ராயப்பன் என்ற வயதான கேரக்டரில் விஜய் நடித்திருந்தார். படம் வெளியானபோது இந்த கேரக்டர் மிகவும் பேசப்பட்டது. ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பையும் பெற்றது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

படத்தில் ராயப்பன் கேரக்டருக்கு குறைந்த அளவே காட்சிகள் இருந்தது. இடையில் வில்லன்களால் அவர் ரயில் நிலையத்தில் வைத்து கொல்லப்படுவார். இருந்த போதிலும் இந்த கேங்ஸ்டர் கேரக்டர் மற்றும் அவர் கேங்ஸ்டராக மாறிய சூழல் போன்றவற்றை வைத்து ஒரு படம் இயக்கப்பட வேண்டும் என்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

அமேசான் ப்ரைம் பதிவு

அமேசான் ப்ரைம் பதிவு

இதனிடையே ராயப்பனை மட்டும் பிரதானமாக வைத்து ஒரு படம் எடுக்கப்பட்டால் எப்படி இருக்கும் என அமேசான் ப்ரைம் தனது ட்விட்டரில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள இயக்குநர் அட்லி, படத்தின் டயலாக்கான செஞ்சுட்டா போச்சு என்று பதிலளித்துள்ளார்.

விஜய்யுடன் மீண்டும் கூட்டணி

விஜய்யுடன் மீண்டும் கூட்டணி

விஜய்யின் 66வது படம் தற்போது வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் உருவாகி வருகிறது. அடுத்ததாக தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குநர்கள் சிவா, கேஎஸ் ரவிக்குமார் மற்றும் அட்லி ஆகியோர் உள்ளனர்.

ரசிகர்கள் ஆர்வம்

ரசிகர்கள் ஆர்வம்

இதனிடையே அட்லி விஜய்யை வைத்து படமியக்கினால் அது கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடித்தமான வகையில் மாஸ் என்டர்டெயினராகவே அமையும். அது பிகில் படத்தின் ராயப்பன் கேரக்டரை மையமாக வைத்து எடுக்கப்பட்டால் கண்டிப்பாக ரசிகர்களை வெகுவாக கவரும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X