ட்ரெண்டிங்கில் தளபதி 68 படம்.. இன்னும் 66வது படமே முடியல.. ரசிகர்கள் ஆர்வத்துக்கு அளவே இல்லையா?
சென்னை : நடிகர் விஜய் பீஸ்ட் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.
படத்தின் இரண்டு கட்ட சூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்ததாக சென்னையில் 3வது கட்ட சூட்டிங் நடைபெறவுள்ளது.
விஜய்யை அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்குவது உறுதியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

பீஸ்ட் படம்
நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், யோகிபாபு உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த மாதத்தில் திரையரங்குகளில் வெளியானது பீஸ்ட் படம். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆயினும் வசூல்மழையை பொழிந்துள்ளது.

தளபதி 66 படம்
இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி 66 படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார் நடிகர் விஜய். இந்தப் படத்தில் அவருடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், ஜெயசுதா, ஷாம் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர். மேலும் இரண்டாவது நாயகியாக மெஹ்ரீன் பிரிசாடா இணைந்துள்ளார்.

விரைவில் அடுத்தக்கட்ட சூட்டிங்
இந்தப் படத்தின் இரண்டு கட்ட சூட்டிங்குகள் தொடர்ந்து சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. ஐதராபாத்தில் பாடல் காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படம் அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீசாக வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விஜய் பிறந்தநாளில் டைட்டில்
படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படாத சூழலில் அடுத்த மாதம் விஜய்யின் பிறந்தநாளையொட்டி படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டும் விஜய்யின் பிறந்தநாளையொட்டியே பீஸ்ட் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகின.

தோழா பட இயக்குநர்
பிரபல தெலுங்கு பட இயக்குநரும் தமிழில் தோழா படத்தை இயக்கியவருமான வம்சி படிப்பள்ளி இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து தளபதி 67 படத்தை விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதும் ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

தளபதி 67 -விரைவில் அறிவிப்பு
இதுகுறித்து இன்னும் இரண்டு வாரத்தில் அறிவிப்பு வெளியாகவுள்ளதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அடுத்ததாக விஜய்யின் தளபதி 68 படம் குறித்த தகவல்கள் தற்போது இணையதளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் அட்லி இயக்குவார் என்று கூறப்படுகிறது.

அட்லி இயக்கத்தில் தளபதி 68?
சமீபத்தில் விஜய்யின் பிகில் படத்தின் ராயப்பன் கேரக்டர் குறித்த ஒரு பதிவுக்கு பதிலளித்த இயக்குநர் அட்லி அந்தப் படத்தின் டயலாக்கையொட்டி, செஞ்சிட்டா போச்சு என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் பிகிலின் பார்ட் 2வாக தளபதி 68 படத்தை இயக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

அட்லி விருப்பம்
தற்போது பாலிவுட்டில் ஷாருக்கை வைத்து படமியக்கிவரும் அட்லி, விஜய்யை மீண்டும் இயக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. விஜய் -அட்லி கூட்டணியில் வெளியான தெறி, மெர்சல் மற்றும் பிகில் படங்கள் சூப்பர் டூப்பர் வெற்றியை கொடுத்த நிலையில் இந்தக் கூட்டணி மீண்டும் இணைய வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











