ஹாட்ரிக் கொடுத்த வெற்றிக் கூட்டணி.. தளபதி 68 படத்தை இவர்தான் இயக்கப்போறாரா.. விரைவில் அறிவிப்பு!

சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் தற்போது வாரிசு படம் உருவாகி வருகிறது. இந்தப் படம் பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து தளபதி 67 படத்தில் லோகேஷுடன் விஜய் இணையவுள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

இந்தப் படத்தின் அறிவிப்பு இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இதற்காக ரசிகர்கள் மிகுந்த வெறித்தனத்துடன் காத்திருக்கின்றனர்.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

நடிகர் விஜய் அடுத்தடுத்த சிறப்பான படங்களில் முன்னணி இயக்குநர்கள், இளம் இயக்குநர்கள் என மாறி மாறி நடித்து வருகிறார். இவருக்கு பல படங்கள் சிறப்பாக கைக்கொடுத்து வருகின்றன. சில படங்கள் சொதப்பினாலும், வசூலில் சாதனை புரிய தவறுவதில்லை. விஜய் என்ற மாஸ் ஹீரோவின் அங்கீகாரம் இது.

விஜய்யின் பீஸ்ட்

விஜய்யின் பீஸ்ட்

கடந்த ஏப்ரலில் விஜய்யின் பீஸ்ட் படம் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் சாதனை படைத்தது. இந்தப் படத்தின் ரிலீசை தொடர்ந்து பிரபல தெலுங்குப்பட இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் வாசுரி படத்தில் இணைந்தார் விஜய்.

லோகேஷ் இயக்கத்தில் விஜய்

லோகேஷ் இயக்கத்தில் விஜய்

தற்போது இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவு கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பொங்கல் ரிலீசாக படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து தளபதி 67 படத்தில் இணையவுள்ளார் நடிகர் விஜய். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள நிலையில் விரைவில் படத்தின் அறிவிப்பு வெளியாகவுள்ளது.

6 வில்லன்கள்

6 வில்லன்கள்

நவம்பரில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படத்தில் 6 வில்லன்கள் விஜய்யுடன் மோதவுள்ளதாகவும் சஞ்சய் தத், பிரித்வி, கௌதம் மேனன் உள்ளிட்டவர்கள் படத்தில் முக்கியமான கேரக்டர்களில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் த்ரிஷா, சமந்தா உள்ளிட்டவர்களும் படத்தில் கமிட்டாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தளபதி 68 பேச்சுவார்த்தை

தளபதி 68 பேச்சுவார்த்தை

இந்தப் படத்தின் அறிவிப்பே இன்னும் வெளியாகாத நிலையில், அடுத்ததாக தளபதி 68 படத்தின் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் விஜய் -அட்லி கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாகவும் படம் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹாட்ரிக் வெற்றி கொடுத்த கூட்டணி

ஹாட்ரிக் வெற்றி கொடுத்த கூட்டணி

முன்னதாக விஜய் -அட்லி கூட்டணியில் தெறி, மெர்சல், பிகில் படங்கள் வெளியாகி ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ள நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியிலும் இதுகுறித்து அட்லி சூசகமாக உறுதிப்படுத்தியிருந்தார். இந்தப் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் படம் பான் இந்தியா படமாக உருவாகவுள்ளதாகம் மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது ஷாருக்கின் ஜவான் படத்தை இயக்கிவரும் அட்லி, அடுத்ததாக விஜய்யை இயக்குவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X