லவ் டுடே படத்தை பாராட்டிய இயக்குநர் அட்லீ.. துள்ளி குதித்த இவானா.. நன்றி சொன்ன பிரதீப்!
சென்னை : பிரதீப் ரங்கநாதன் இயக்கம் மற்றும் நடிப்பில் கடந்த மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்துள்ளது லவ் டுடே படம்.
விஜய்யின் நடிப்பில் வெளியான லவ் டுடே படத்தின் டைட்டிலுடன் இந்தப் படத்தில் களமிறங்கிய பிரதீப், தன்னுடைய முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்தப் படத்தில் இவானா, சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ள நிலையில், ரசிகர்களை இந்தப் படத்தின் கதைக்களம் வெகுவாக கவர்ந்துள்ளது.

லவ் டுடே இயக்குநர் பிரதீப்
ஜெயம் ரவி, யோகிபாபு, காஜல் அகர்வால் என முன்னணி நடிகர்கள் நடித்து வெளியான கோமாளி படத்தை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் பிரதீப் ரங்கநாதன். இந்தப் படத்தில் 90களின் இளைஞர்கள் மனநிலையை அப்படியே பிரதிபலித்திருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து அவரது நடிப்பில் கடந்த மாதத்தில் வெளியானது லவ் டுடே. இந்தப் படத்தை இயக்கி நடித்திருந்தார் பிரதீப்.

ரசிகர்களை கவர்ந்த லவ் டுடே
இந்தப் படத்தில் தற்போதைய காதலர்களின் மனநிலையை பிரதிபலித்துள்ள பிரதீப், சிறப்பான கதைக்களத்துடன் ரசிகர்களுக்கு சூப்பர் ட்ரீட் கொடுத்திருந்தார். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில், பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படம் மற்றும் பாடல்கள் பிரபலங்கள் மட்டுமில்லாமல் ரசிகர்களின் பாராட்டிற்கும் உள்ளாகியுள்ளது.

வசூல் மழையில் லவ் டுடே படம்
இந்தப் படம் தற்போது ஓடிடியிலும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. திரையரங்குகளில் ஒருபுறம் ஒரு மாதத்தை கடந்து வெற்றிகரமாக ஓடிவரும் இந்தப் படம் சிறப்பான வசூலை பெற்றுத் தந்துள்ளது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலுங்கிலும் படம் ரிலீசாகி வரவேற்பை பெற்றுள்ளது. முதல் வாரத்தில் மட்டுமே தெலுங்கில் 10 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை பெற்றுத் தந்துள்ளது.

இயக்குநர் அட்லீ பாராட்டு
இதனிடையே தமிழிலும் 75 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து தொடர்ந்து 100 கோடி ரூபாயை நோக்கி நடைபோட்டு வருகிறது. இதனிடையே பிரபல இயக்குநர் அட்லி இந்தப் படத்தை பார்த்துவிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். சிறப்பான காமெடி என்று கூறியுள்ள அவர், பிரதீப் சிறப்பான கதைக்களத்தில் கலக்கியுள்ளதாக பாராட்டியுள்ளார்.

இவானா மகிழ்ச்சிப் பதிவு
மேலும் ராதிகா, சத்யராஜ், யுவன் என ஒவ்வொருவரின் பெயரையும் குறிப்பிட்டு பாராட்டியுள்ளார் அட்லீ. இதையடுத்து அவரது இந்த ட்வீட்டிற்கு பிரதீப் மற்றும் இவானா இருவரும் மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்துள்ளனர். தன்னை கவர்ந்த இயக்குநர் தன்னுடைய படத்தை பாராட்டியது மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளதாக பிரதீப் தெரிவித்துள்ளார்.

இவானாவிற்கு தனியாக பாராட்டு
அட்லியின் இந்தப் பாராட்டிற்கு பதிலளித்துள்ள படத்தின் நாயகி இவானா, இந்த பாராட்டு தன்னுடைய நாளை சிறப்பாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இவரது இந்த கமெண்ட்டிற்கு பதிலளித்துள்ள அட்லி, கிரேட் வொர்க் இவானா என்று தனியாக பாராட்டு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











