Director Atlee: லியோ படத்தில் பிடித்த சீன்.. அட்லி பகிர்ந்த சுவாரஸ்யம்!

சென்னை: விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த மாதத்தில் திரையரங்குகளில் ரிலீசானது லியோ படம்.

லோகேஷ் கனகராஜ் -விஜய் கூட்டணியில் இரண்டாவது படமாக வெளியான லியோ, ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது. முன்னதாக விஜய்யின் அடுத்தடுத்த 3 படங்களை இயக்கியுள்ள அட்லி, லியோ படம் குறித்த தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

Director Atlee hails Actor Vijays Leo movie and his favourite scene in the movie

விஜய்யின் லியோ படம்: நடிகர் விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. கடந்த ஜனவரியில் வெளியான வாரிசு படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் சாதனை படைத்தது. அதேபோல கடந்த மாதத்தில் வெளியான லியோ படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. லோகேஷ் கனகராஜ் -விஜய் கூட்டணியில் மாஸ்டர் படத்தை தொடர்ந்து இரண்டாவது படமாக லியோ வெளியானது.

லியோ படத்தின் வசூல் மழை: இந்தப் படம் சர்வதேச அளவில் அதிகமான ரசிகர்களை கவர்ந்து தொடர்ந்து திரையரங்குகளில் ஓடி வருகிறது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தபோதிலும் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 580 கோடி ரூபாய்களை படத்தின் வசூல் தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் விரைவில் படம் ஜெயிலர் படத்தின் வசூல் சாதனையை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

வெளிநாடுகளிலும் வரவேற்பு: இந்திய அளவில் அனைத்து மொழிகளிலும் ரசிகர்களை கவர்ந்துள்ள லியோ படம் வெளிநாடுகளிலும் மிகச்சிறப்பான வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது. அடுத்ததாக தளபதி 68 படத்தின் சூட்டிங்கில் பங்கேற்றுள்ளார் விஜய். இந்தப்படத்தின் சூட்டிங் அடுத்தடுத்து சென்னை, தாய்லாந்து ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. விரைவில் அடுத்தக்கட்ட சூட்டிங் குறித்த அப்டேட்டும் எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் அட்லீ பாராட்டு: முன்னதாக விஜய்யின் தெறி, பிகில், மெர்சல் என அடுத்தடுத்த படங்களை இயக்கியுள்ள அட்லி, தற்போது லியோ படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தனது பேட்டியொன்றில், இந்தப் படம் தனக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் படத்திற்கு படம் லோகேஷ் கனகராஜின் படமியக்கும் திறன் அதிகரித்து வருவதை தான் பார்த்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். படத்தில் காபி ஷாப் காட்சி தனக்கு மிகவும் பேவரைட் என்றும் கூறியுள்ளார்.

24வது நாளில் லியோ படம்: மேலும் லோகேஷின் படங்களின் வில்லன்கள் தனக்கு மிகவும் பிடித்தமானவர்கள் என்றும் அவர் எப்போதுமே வழக்கமான ஃபார்மேட்டை உடைத்து வருவதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் நாயகனின் கெத்தையும் தன்னுடைய படங்களில் அவர் மெயின்டெயின் செய்து வருவதாகவும் அட்லி மேலும் கூறியுள்ளார். இன்றைய தினம் லியோ படம் 24வது நாளை எட்டியுள்ள நிலையில், தொடர்ந்து திரையரங்குகளில் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X